400 கி.மீ. ரேன்ஜ் - டாப் டக்கர் அம்சங்களுடன் ரிலீசுக்கு ரெடியாகும் நெக்சான் EV

By Kevin KaarkiFirst Published Feb 23, 2022, 12:42 PM IST
Highlights

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், புதிய நெக்சான் EV மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய நெக்சான் EV ப்ரோடக்‌ஷன் ரெடி மாடல் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

பூனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையின் அருகில் இந்த மாடல் சோதனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் பின்புற பம்ப்பரில் ரியர் ரிஃப்லெக்டர்கள் உள்ளன. 

டாடா நெக்சான் EV மாடலில் புதிதாக 40 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. பெரிய பேட்டரி அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என எதிர்பார்க்கலாம். புதிய மாடலில் 6.6 கிலோ வாட் AC சார்ஜர் வழங்கப்படலாம். தற்போதைய நெக்சான் EV மாடலில் 3.3 கிலோ வாட் AC சாரஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய பத்து மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. புதிய சார்ஜர் சார்ஜிங் நேரத்தையும் கணிசமாக குறைக்கும். இதுதவிர 3.3 கிலோ வாட் AC சார்ஜரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெக்சான் EV மாடலில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், புதிய அலாய் வீல் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 

இவைதவிர புதிய நெக்சான் EV மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டாடா நெக்சான் EV விலை ரூ. 14.29 லட்சம் என துவங்குகிறது. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

click me!