மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! மார்ச்சில் ஊதிய உயர்வா

By Pothy RajFirst Published Feb 23, 2022, 12:30 PM IST
Highlights

7-வது ஊதியக்குழு அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு(டிஏ) விரைவில் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக்குழு அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு(டிஏ) விரைவில் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 3 சதவீதம் வரை இருக்கலாம், 2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருக்கும் நிலுவைத் தொகையும் சேர்த்து, மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்போது ஊதியம் அதிகரி்க்கும்

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி பெறுகிறார்கள். இது 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிக்கும். மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தும்போது, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்கள் நிலுவைத் தொகையும் சேர்த்து ஊதியத்தில் கிடைக்கும்.

7-வது ஊதியக்குழு வந்தபின், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்தவகையில் ஜனவரி மாதத்துக்கான படி மார்ச்சில் உயரும், அடுத்ததாக ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். 

இந்த அகவிலைப்படி என்பது ஊழியர்கள் எங்கு பணியாற்றுகிறார்கள் அதாவது நகர்ப்புறம், சிறியநகரம், கிராமப்புறங்கள் ஆகியவற்றைப் பொறுத்து இந்த அகவிலைப்படி அளவு மாறுபடும். மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதம்அறிவித்தால், 48லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காலத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டி 28%லிருந்து 31%மாக உயர்த்தப்பட்டது. 

7-வது ஊதியக்குழு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறையில்தான் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.
அதாவது, அகவிலைப்படி சதவீதம்=2001ம்(100) ஆண்டை அடிப்படை ஆண்டாக வைத்து, 12 மாதங்களின் சில்லரை பணவீக்கம்(ஏஐசிபிஐ) கணக்கிடப்படும். அதாவது, 115.76)/115.76*100. என்ற ரீதியில் கணக்கிடப்படுகிறது

click me!