உக்ரைனில் அத்துமீறிய ரஷ்யா: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்த நிதித் தடைகள் என்னென்ன? முழு விவரம்

By Pothy Raj  |  First Published Feb 23, 2022, 11:12 AM IST

உக்ரைன் நாட்டின் இரு மாநிலங்களை சுதந்திரமாக அங்கீகரித்து அங்கு படைகளை அனுப்பிஅத்து மீறிய ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பல்வேறு நிதித்தடைகளை விதித்துள்ளன.


உக்ரைன் நாட்டின் இரு மாநிலங்களை சுதந்திரமாக அங்கீகரித்து அங்கு படைகளை அனுப்பிஅத்து மீறிய ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பல்வேறு நிதித்தடைகளை விதித்துள்ளன.

முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைப்பிரிவான நேட்டோவில் சேரவிருப்புகிறது. ஆனால், உக்ரைனை நேட்டோவில் சேர ரஷ்யா அனுமதிக்கவில்லை. இதனால் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரர்களைத் திரட்டி ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இது தவிர உக்ரைன் நாட்டுக்குள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிவினருக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்து கொம்புசீவிவிட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனின் கிழக்குப்பகுதியில் இருக்கும் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் அதிபர் புதினை சமீபத்தில் சந்தித்து தங்கள் மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கக் கோரினர்

. இதன்படி, டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களையும் தன்னாட்சி பெற்ற சுதந்திரநாடாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த இரு பகுதிகளுக்குள் தனது படைப்பிரிவையும் ரஷ்யா அனுப்பியுள்ளது. 

ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் ஏற்கெனவே போர் பதற்றம் தீவிரமாக இருக்கும் நிலையில் அதிபர் புதினின் இந்த செயல் எரியும் தீயில் எண்ணெய்வார்க்கும் போல் இருந்தது. 

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யாவின் செயல் அறிவற்றது என விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பல்வேறு நிதித்தடைகள் ரஷ்யாவுக்கு எதிராகவும், அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களுக்கு எதிராகவும் பிறப்பித்தார். தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா அத்துமீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று வெள்ளை மாளிகையில் ரஷ்யாவுக்கு எதிராக விதித்த நிதித்தடைகள் குறித்து கூறியதாவது:
சர்வதேச சட்டங்களை ரஷ்ய அதிபர் புதின் மீறிவிட்டார். உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து புதின் இதுபோன்று செயல்பட்டால், அடுத்தடுத்து கடும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்

  •   ரஷ்யாவின் இரு மிகப்பெரிய நிதி நிறுவனங்கள், ஒரு அரசு வங்கிக்கு முழுமையாக நிதித்தடை விதிக்கப்படுகிறது
  •  மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு வழங்கப்படும் கடன்நிதியுதவி நிறுத்தப்படுகிறது. 
  •   ரஷ்யா இனிமேல், மேற்கத்திய நாடுகளில் இருந்து எந்தவிதமான நிதியும் கோர முடியாது, மேற்கத்திய நாடுகளின் சந்தைகளில் வர்த்தகம் செய்ய முடியாது, அல்லது ஐரோப்பிய சந்தைகளிலும் ரஷ்யா வர்த்தகம் செய்ய முடியாது, கடன் பெற முடியாது.
  •    ரஷ்யாவின் விஇபி, ரஷ்யாவின் ராணுவ மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டு சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. அமெரிக்க நிதிசெயல்முறையை இந்த நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது
  •  மேற்கத்திய நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பங்கள், மென்பொருள்களை ரஷ்யா இனிமேல் பயன்படுத்த முடியாது.இதனால் ரஷ்யாவில் உள்ள சில நிதி நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் கொண்டுள்ள நிதிப்பரிமாற்றங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்
  •  ரஷ்யாவிலிருந்து நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை ஜெர்மனி செய்து வந்தது. இந்தப் பணியை முற்றிலுமாக ஜெர்மனி நிறுத்துவதாக அறிவித்துள்ளது
  •    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன
  •     பிரிட்டனில் செயல்பட்டுவரும் 5 ரஷ்ய வங்கிகள், 3 பெரும் கோடீஸ்வரர்களுக்கு பிரதமர் போரிஸ்ஜான்சன் தடை விதித்துள்ளார். 
  •    உக்ரைனுக்குள் ரஷ்யா தொடர்ந்து அத்துமீறினால் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என பிரிட்டன் பிரதமர் ஜான்சன் எச்சரித்துள்ளார்
     
click me!