ரூ.42,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவரா..? உங்களுக்குத்தான் மத்திய அரசின் இந்த அதிரடி சலுகை..!

By Thiraviaraj RMFirst Published Aug 29, 2019, 12:34 PM IST
Highlights

தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மத்திய நேரடி வரி வாரியக் குழு பரிந்துரைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மத்திய நேரடி வரி வாரியக் குழு பரிந்துரைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தற்போதுள்ள வருமான வரி சட்டம் சுமார் 58 ஆண்டுகள் பழமையானது. இந்த வரி சட்டத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய நேரடி வரி விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான பரிந்துரையை தயாரிக்க, மத்திய நேரடி வரி வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு தனிநபர் வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் கோரி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த ஆகஸ்ட்19ம் தேதி அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஒப்படைத்துள்ளது. எனினும், இந்த புதிய வரைவு பொதுமக்கள் பார்வைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. 

இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, தனிநபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. வருமான வரி வாரியக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இருக்கும். இதேபோல், ஆண்டு வருமானமாக ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை பெறுபவர்களுக்கு தனிநபர் வருமான வரியை 20 சதவீதமாக குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, தனிநபர் வருமான வரி என்பது, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். இதுவே தற்போது அமலில் இருக்கும் நடைமுறை. 

தற்போது, 5%, 20%, 30 சதவீதம் என 3 பிரிவுகளாக இருக்கும் இந்த தனிநபர் வருமான வரி விகிதங்களுக்கு மாறாக, 5%, 10%, 20%, 30%, மற்றும் 35% என 5 பிரிவுகளாக பிரித்து தனிக்குழு பிரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது. ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வருமானம் பெறுபவர்களக்கு ஏற்கனவே இருக்கும் 30 சதவீதமே தொடரும் என தெரிகிறது. ஆனால், ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு புதிதாக 35 சதவீதம் வருமான வரி விகிதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

 

இந்த 2019ஆம் ஆண்டிற்கான இடைக்காலை பட்ஜட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தபோது, அதில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்களுக்கு விரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 

click me!