Swiggy Services stops in Chennai: ஸ்விக்கி ஷாக்: சென்னை உள்பட 5 நகரங்களில் மட்டும் இந்த சேவை நிறுத்தம்

By Pothy RajFirst Published May 11, 2022, 4:32 PM IST
Highlights

Swiggy stops 'Supr Daily' service in chennai : நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி சென்னை உள்பட 5 நகரங்களில் தனது முக்கியமான சேவையை நிறுத்துகிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி சென்னை உள்பட 5 நகரங்களில் தனது முக்கியமான சேவையை நிறுத்துகிறது.

ஸ்விக்கி நிறுவனத்தின் சந்தாதாரர்ளுக்காக நடத்தப்படும் சூப்பர் டெய்லி சேவையை டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் நிறுத்துகிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் இதுவரை லாபம் ஏதும் ஈட்டவில்லை என்பதாலும் செலவைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos

சூப்பர் டெய்லி என்பது சந்தா அடிப்படையில் பால், அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை 2015ம்ஆண்டு புனித் குமார், ஸ்ரேயாஸ் நாகதாவானே இருவரும் சேர்ந்து தொங்கினர். இருவரும் மும்பை ஐஐடியில் பயின்றவர்கள். இந்த நிறுவனத்தை 2018ம் ஆண்டு ஸ்விக்கி நிறுவனம் விலைக்கு வாங்கியது.

2018ம் ஆண்டு சூப்பர் டெய்லியை ஸ்விக்கி விலைக்கு வாங்கியபோது, தினசரி 6ஆயிரம் ஆர்டர்கள் மும்பையின் புறநகர் பகுதிகளுக்கு வரும். கடந்த 4 ஆண்டுகளில் சூப்பர் டெய்லி சேவையின் எண்ணிக்கை 2 லட்சமாக 6 நகரங்களில் அதிகரித்தது. ஆனால் லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. 

சூப்பர் டெய்லி நிறுவனத்தின் சிஇஓ பானி கிஷன், வெளியிட்டஅறிக்கையில் “ வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத பகுதியாக இருக்கும்போது, துரதிர்ஷ்டமாக இதுவரை நாம் லாபத்தை அடையவில்லை. இந்த வணி்கத்தை இன்று நிர்வகிக்க கணிசமான நேரத்தையும், பணத்தையும் நாம் செலவழிக்கிறோம்.

வணிகத்தைப் பொறுத்தவரை நமது இலக்குகளில் இருந்து திசை திரும்புகிறோம்,சந்தைக்கு ஏற்றார்போல் மாறவில்லை. நம்முடைய இலக்குகளை அடைய நம்மை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சூப்பர் டெய்லியை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் சேவை மே 12ம் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது. ஆனால் பெங்களூரு நகரில் தொடர்ந்து எங்கள் சேவை தொடரும். வாடிக்கையாளர்களுக்கு சந்தா தொகை மீதமிருந்தால், அல்லது செலுத்தியிருந்தால் அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்விக்கி நிறுவனம் மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் செயல்படுத்தி வந்த ஜீனி சேவை(பிக்அப் மற்றும் டிராப்) செவ்வாய்கிழமை முதல் நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்விக்கியின் கடும் போட்டியாளரான ஜோமேட்டோவும் கடும் நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஸ்விக்கியின் பங்கு ரூ.169.10 ஆக உயர்ந்தது, பின்னர் 70 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது

click me!