LIC IPO: LIC IPO GMP :எல்ஐசி ஐபிஓ விற்பனை கடந்த 9ம் தேதியுடன் முடிந்த நிலையில், அதிகாரபூர்வமற்ற கிரே மார்க்கெட்டில்(ஜிஎம்பி) எல்ஐசி பங்குகள் விற்பனை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்ஐசி ஐபிஓ விற்பனை கடந்த 9ம் தேதியுடன் முடிந்த நிலையில், அதிகாரபூர்வமற்ற கிரே மார்க்கெட்டில்(ஜிஎம்பி) எல்ஐசி பங்குகள் விற்பனை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎம்பி அதாவது கிரே மார்க்கெட் என்பது பங்குச்சந்தையில் அதிகாரப்பூர்வமாக பங்களை விற்பனைக்கு வருவதற்கு முன்பாகவே, பங்குகளை வாங்குவதும், விற்பதும் நடப்பதுதான் கிரே மார்க்கெட்டாகும்.
அமோக வரவேற்பு
மத்தியஅரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய்து, ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு நினைத்தநிலையில், ரூ.43 ஆயிரத்து 933 கோடிக்கு விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன. எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு 47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 6 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதாவது ரூ.12 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஊழியர்கள், பாலிசிதாரர்கள்
எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் விருப்ப விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 4.4 மடங்கு கூடுதலாக வந்துள்ளன. தனிநபர்கள் பிரிவில் அதாவது சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு, ஏறக்குறைய ரூ.12 ஆயிரத்து 450 கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.
கிரே மார்க்கெட்
எல்ஐசி ஐபிஓ நடந்து முடிந்த நிலையில், அதிகாரபூர்வமற்ற சந்தையான கிரே மார்க்கெட்டில் ஒரு பங்கு ஒன்றுக்கு ஐபிஓ விலையைவிட மைனஸ் ரூ.8 முதல் ரூ.10வரை கைமாறுகிறது. ஒரு வாரத்துக்கு முன் ஒரு பங்கின் விலை ரூ.100 முதல் 105 வரை விலை வைக்கப்பட்டு கைமாற்றப்பட்டது.
ஆனால், தற்போது பங்கின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் எல்ஐசி ஐபிஓவில் முதலீடு செய்தவர்கள் கவலையில் உள்ளனர். கிரே மார்க்கெட்டில் நேற்று ரூ.33 இருந்த நிலையில் இன்று அதைவிட ரூ.25 குறைவாக மைனஸ் ரூ.8க்கு கைமாற்றப்படுகிறது. எல்ஐசி ஐபிஓ தொடங்கப்பட்டபோது ரூ.92க்கு கைமாறியது. ஆனால், உலகச்சந்தையில் ஏற்பட்ட சாதகமற்றபோக்கு படிப்படியாக ஆர்வத்தைக் குறைக்கிறது