Stock Market:பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்! சென்செக்ஸ் உயர்வு, நிப்டி சரிவு! வீழ்ச்சியில் அதானி பங்குகள்

By Pothy RajFirst Published Feb 2, 2023, 4:55 PM IST
Highlights

Stock Market Today:மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று  ஏற்ற, இறக்கத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தநிலையில், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

Stock Market Today:மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று  ஏற்ற, இறக்கத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தநிலையில், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று  ஏற்ற, இறக்கத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தநிலையில், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வட்டிவீதத்தில் 25 புள்ளிகளை உயர்த்தியது. வட்டிவீதம் அதிகமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் குறைந்த அளவுதான் உயர்ந்தது, முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்தது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று உயர்வுடனே முடிந்தது. 

அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது

அதானி என்டர்பிரைசர்ஸ்

ஆனால், அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் ரூ.20ஆயிரம் கோடிக்கு எப்பிஓ பங்குகளை வெளியிட்டது. அனைத்துப் பங்குகளும் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டநிலையில்,திடீரென எப்பிஓ-வை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்தது. இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் விலை கடுமையாகச் சரிந்தது.

இதனால் காலை முதலே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. அவ்வப்போது பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டாலும், சரிவு தொடர்ந்து வந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நேரம் வர்த்தகம் ஊசலாட்டத்துடனே இருந்தது. 

ஆனால், கடைசி ஒரு மணிநேரத்தில் பங்குச்சந்தையில் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கியதால், சென்செக்ஸ் 60ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. ஆனால் நிப்டியில் சரிவு காணப்பட்டது.

அதானி குழுமத்துக்கு எவ்வளவு கடன் கொடுத்தீங்க! வங்கிகளிடம் விளக்கம் கேட்கும் ஆர்பிஐ

ஏற்ற இறக்கம்

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து, 59,932 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 5 புள்ளிகள் குறைந்து, 17,610 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 16 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. மற்ற 14 நிறுவனப் பங்குகள் விலை சரி்ந்தன.

ஐடிசி, டிசிஎஸ், இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக், விப்ரோ, மாருதி, ஆக்சிஸ்  வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை உயர்வில் முடிந்தன.

அதானி பங்குகள் சரிவு

அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி வில்மர் நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 10 சதவீதம் வரை சரிந்தன. அதானி என்டர்பிரைசஸ் 26 சதவீதமும், அதானி போர்ட்ஸ், சிறப்பு பொருளாதார மண்டலம் 6.5சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன

தொடர் சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: அதானி FPO வாபஸ்

நிப்டியில் ஐடிசி, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், இன்ட்ஸ்இன்ட்வங்கி, எச்யுஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், யுபிஎல், எச்டிஎப்சி லைப், டவிஸ் லேப் பங்குகள் விலை குறைந்தன.

நிப்டியில், எப்எம்சிஜி, ஐடி, பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்தன. உலகோம், எரிசக்தி பங்குகள் விலை குறைந்தன. 

 

click me!