100 நாள் வேலைத்திட்டம்: இறுக்கும் மத்தியஅரசு; மாநில அரசுகள் நிதிபெற புதிய நிபந்தனை

By Pothy RajFirst Published Feb 28, 2022, 10:53 AM IST
Highlights

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்(100நாள் வேலைத்திட்டம்) கீழ், 80 சதவீத மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்கள் அடுத்த நிதியாண்டு முதல் மத்திய அரசு நிதி பெற முடியாது என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்(100நாள் வேலைத்திட்டம்) கீழ், 80 சதவீத மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்கள் அடுத்த நிதியாண்டு முதல் மத்திய அரசு நிதி பெற முடியாது என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய ஊரக வேலைவாய்ப்பு அமைச்சகம்தத்தின் புள்ளிவிவரங்கள்படி, பாஜக ஆளும் குஜராத், அருணாச்சலப்பிரதேசம், கோவா, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர்ஹாவேலி ஆகியவற்றில் எந்த மாவட்டத்திலும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு எந்த குறைதீர்ப்பு அதிகாரியும் இல்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் 100நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும்நிலையில் அதில் 4 மாவட்டங்களில் மட்டுமே குறைதீர்ப்பு அதிகாரிகள் உள்ளன. இதுபோல் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் 23 மாவட்டங்களுக்கு 4 குறைதீர்ப்பு அதிகாரி மட்டுமே இருக்கிறார்.

ஹரியானா, பஞ்சாப்பிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. 22 மாவட்டங்களில் 4 குறைதீர்ப்பு அதிகாரிதான் உள்ளனர். பஞ்சாபில் 7 அதிகாரிகள் மட்டுமேஉள்ளனர். ஆனால், மாவட்டந்தோறும் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய கிராமப்புறமேம்பாட்டு துறையின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா கூறுகையில் “ 100நாள் வேலைத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஒரு மாநிலம் தங்களின் 80 சதவீதமாவட்டங்களுக்கு குறைதீர்ப்புஅதிகாரியை நியமித்திருந்தால்தான் அடுத்த நிதியாண்டு, 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியைப் பெற முடியும். அவ்வாறு நியமிக்காத மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோரமுடியாது” எனத் தெரிவித்தார்

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் கிரிராஜ் சிங் கடந்த சிலநாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் “ நாட்டின் பல்வேறு மாநில அரசுகள், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியிமிக்க வேண்டிய குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காதது வேதனையாக இருக்கிறது.

சில மாநிலங்களில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மாவட்டந்தோறும் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தால், அமைச்சகம் அடுத்தநிதியாண்டு முதல்நிதி வழங்காது” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

click me!