Share market today: முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அச்சம்: பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவுக்கு காரணம் என்ன?

Published : Feb 28, 2022, 10:20 AM IST
Share market today: முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அச்சம்: பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவுக்கு காரணம் என்ன?

சுருக்கம்

ரஷ்யா-உக்ரைன் போர் நீளும் என அச்சம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

ரஷ்யா-உக்ரைன் போர் நீளும் என அச்சம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

உக்ரைன்-ரஷ்யா போர், அமெரிக்க  பெடரல் வங்கி வட்டியை உயர்த்தவிருக்கும் அச்சம், கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்கு மேல்  உயர்ந்தது, போன்றவற்றால், மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

கடந்த 7 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கியதால்,  பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது. சென்செக்ஸ் 1328 புள்ளிகள் உயர்ந்து, 55,858புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 410புள்ளிகள் உயர்ந்து, 16,658 புள்ளிகளில் முடிந்தது

ஆனால், ரஷ்யா மீது அமெரி்க்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள புதிய தடைகள், ரஷ்ய வங்கிகளுக்கு விதித்த தடைகள்போன்றவை போரைத் தீவிரப்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்பினர். இதையடுத்து, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது. விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சென்க்ஸபுள்ளிகள் 700புள்ளிகள் சரிந்தநிலையில், 55,170 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 177 புள்ளிகள் குறைந்து 16,481 புள்ளிகளில் நிலைகொண்டது. 

மும்பை பங்குச்சந்தையில், டாடா ஸ்டீல், பவர்கிரிட் பங்குகள் மட்டுமே ஓரளவு லாபமீட்டி வருகின்றன. பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன.

ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, வங்கி, ரியல்எஸ்டேட் துறை பங்குகள் சரிவை நோக்கியுள்ளன. தகவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை பங்குகள் சரிந்தபோதிலும், உலோகத்துறை பங்குகள் உயர்ந்துள்ளன

பங்குச்சந்தையின் இந்த சரிவு குறித்து ஜியோஜித் பைனான்சியல் சேவையின் பொருளாதார வல்லுநர் ஆனந்த்ஜேம்ஸ் கூறுகையில் “ வெள்ளிக்கிழமை தேசியப்பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை உயர்வை வைத்து இன்று வர்த்தகத்தை தொடங்கிய முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்தால் இன்றும் உயர்வாக இருக்கும் என தவறாக சிலர் கணித்துவிட்டார்கள்.  உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடையலாம் என்பதால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகிறார்கள். முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை” எனத் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!
Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!