45 சதவீதத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"ஸ்டார்ட்அப்கள் புதுமையின் ஆற்றலை வெளிப்படுத்தும் அதிவேக வளர்ச்சிக்கான இயந்திரங்கள். இன்று பல பெரிய நிறுவனங்கள் முன்பு ஸ்டார்ட்அப்களாக இருந்தவைதான். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் அவை இன்று ஒளிரும் கலங்கரை விளக்கங்களாக மாறியுள்ளன" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுகிறார்.
ஜனவரி 16, 2016 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டபோது பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். ஸ்டார்ட்அப் திட்டம் இந்தியாவில் புது தொழில் முயற்சிகளை வளர்ப்பதற்கும், தொழில்முனைவோருக்கான வலுவான சூழலை உருவாக்குவதற்கும் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் ஆகும்.
ஸ்டார்ட்அப் இந்தியா மூலம் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலைகளை உருவாக்கும் தொழில்முனைவோரின் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட்அப் இந்தியா தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது.
மோடி ஆட்சியில் மக்கள்தொகையில் ஏழைகள் எண்ணிக்கை 24.82 கோடி குறைவு: நிதி ஆயோக் தகவல்
2016ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையை வெறும் 300 ஆக இருந்தது. ஜனவரி 14, 2024 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1,18,320 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்த முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளன.
ஸ்டார்ட்அப் பெண்கள்!
தொழில்முனைவில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகிறது. இதை உணர்ந்து ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் பெண்களை தொழில்முனைவோராக்க தீவிரமாக முயன்று வருகிறது.
அக்டோபர் 31, 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தமுள்ள 1,14,902 ஸ்டார்ட்அப்களில் 54,569 ஸ்டார்ட்அப்களில் (47%) குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது, இருக்கிறார். இது ஸ்டார்ட்அப் துறையில் பெண்களின் தாக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
45 சதவீதத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன என்பது ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் அனைத்து இடங்களிலும் பரவலாக வெற்றி அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பரவலாக்கம் ஸ்டார்ட்அப் துறையின் வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்கிறது.
வீடியோ: விமானியை ஆக்ரோஷமாகத் தாக்கிய பயணி! விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் ஆத்திரம்!