பிரதமர் மோடி ஆட்சியின் கொள்கைகளின் விளைவாக, கடந்த 9 ஆண்டுகளில் வறுமை விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என நிதி அயோக் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என நிதி ஆயோக்கின் '2005-06 முதல் இந்தியாவில் பல பரிமாண வறுமை நிலை' என்ற ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 2013-14 முதல் 2022-23 வரையிலான காலத்தில் வறுமையின் அனைத்து பரிமாணங்களையும் நிவர்த்தி செய்ய மத்திய அரசு எடுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளின் பலனாக இது கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையை நிதி ஆயோக்கின் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் இன்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ பி.வி.ஆர். சுப்ரமணியம் முன்னிலையில் வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு மனிதவள மேம்பாட்டு இயக்கமான OPHI மற்றும் ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டம் ஆகியவை இந்த ஆய்வறிக்கைக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கியுள்ளன.
பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விரிவான நடவடிக்கையாகும். இது பணவியல் அம்சங்களுக்கு அப்பால் பல பரிமாணங்களில் வறுமை நிலை பற்றிய அறிய உதவுகிறது. இந்த வழிமுறை கடுமையான வறுமையை மதிப்பிடுவதற்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவீட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
வீடியோ: விமானியை ஆக்ரோஷமாகத் தாக்கிய பயணி! விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் ஆத்திரம்!
நிதி ஆயோக் கட்டுரையின்படி, 2013-14 இல் இந்தியாவில் பல பரிமாண வறுமையில் இருந்தவர்கள் 29.17% ஆக இருந்தனர். 2022-23 இல் இது 11.28% ஆகக் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது 17.89 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5.94 கோடி பேர் பல பரிமாண வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஏழை மக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கிறது.
வறுமையின் அனைத்து பரிமாணங்களையும் போக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. அவை 24.82 கோடி தனிநபர்கள் பல பரிமாண வறுமையிலிருந்து தப்பிக்க வழிவகுத்துள்ளன. இதன் விளைவாக, பல பரிமாண வறுமையை பாதியாகக் குறைக்கும் இலக்கை இந்தியா 2030க்கு முன்பே அடைய வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் அறிக்கை சொல்கிறது.
இந்தியாவில் மேலும் பல கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்!