மக்களுக்கு எளிதாக சில்லறை நாணயங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரிசோதனை முயற்சியில் 12 நகரங்களில் QRகோட் முறையில் சில்லறை நாணயங்கள் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மக்களுக்கு எளிதாக சில்லறை நாணயங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரிசோதனை முயற்சியில் 12 நகரங்களில் QRகோட் முறையில் சில்லறை நாணயங்கள் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
அதில் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கடனுக்கான வட்டிவீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்அறிவித்தார்.
இதன் மூலம் ரிசர்வ் வங்கி 225 புள்ளிகள் வட்டியை இதுவரை உயர்த்தியுள்ளது. கடனுக்கான வட்டி 4 சதவீதமாக இருந்தநிலையில் தற்போது 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி வட்டியை 35 புள்ளிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பில் முக்கிய அம்சமாக சில வங்கிகளின் கூட்டு அடிப்படையில் “ கியூ ஆர் கோட் அடிப்படையில் சில்லறை நாணயங்கள் வழங்கும் எந்திரங்கள் பரிசோதனை முயற்சியாக 12 நகரங்களில் வைக்கப்படும்” என அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் கியூஆர் கோட் அடிப்படையிலான நாணயங்கள் வழங்கும் எந்திரம், ஒரு வாடிக்கையாளர் யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யும்போது, சில்லறை நாணயங்களை வழங்கி அவரின் வங்கிக்கணக்கிலிருந்து டெபிட் செய்யும்.
வழக்கமாக இருக்கும் நாணயங்கள் வழங்கும் எந்திரத்தைப் போல் இருக்காது. அதாவது பணத்தை எந்திரத்தில் அளித்துவிட்டு அதற்கு ஈடாக நாணயங்களை பெறுவது போல் இருக்காது. வாடிக்கையாளரின் யுபிஐ பரிமாற்றத்தின் அடிப்படையில்தான் இயங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்போல் , மதிப்பின் அடிப்படையில் நாணயங்களை இந்த எந்திரத்தில் இருந்து பெறலாம்.
இந்த திட்டம் முதல்கட்டமாக 12 நகரங்களில் 19இடங்களில் பரிசோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும். ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகமாக கூடும்இடங்களில் இந்த எந்திரம் நிறுவப்பட்டு எளிதாக நாணயங்களை பெறும்வகையில் வசதி செய்யப்படும். பரிசோதனை முயற்சியில் எந்தமாரியான செயல்பாடுகள் இருக்கிறது என்பதை அறிந்து அதன்பின் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்படும்.