Share Market Today: பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ், நிப்டி ஏற்றம்: அதானி பங்ககுள் எழுச்சி

By Pothy RajFirst Published Feb 8, 2023, 3:56 PM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த இரு நாட்களாக சரிவில்முடிந்தநிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் முடிந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த இரு நாட்களாக சரிவில்முடிந்தநிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் முடிந்தன.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த நேர்மறையான கண்ணோட்டம் போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

பங்குச்சந்தையில் ஏற்றம்! சென்செக்ஸ், நிப்டி ஜோர்: ஆர்பிஐ மீது எதிர்பார்ப்பு

அமெரிக்கப் பங்குச்சந்தையும் நேற்று ஏற்றத்துடன் முடிந்தது. அந்நாட்டு பெடரல் ரிசர்வ் தலைவர் பணவீக்கம் குறித்த கருத்துக்களும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதால், காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்துடன் வர்த்தகம் நடந்தது.

அதற்கு ஏற்றார் போல் அதானி குழுமத்தில் உள்ள 10 பங்குகளில்  7 பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு 19 சதவீதம் உயர்ந்தது. 9 ம்தேதி 3வது காலாண்டு முடிவுகள் வருவதால் பங்கு விலை அதிகரித்தது. 

இது தவிர அதானிபோர்ட் 7%, அதானி டிரான்மிஷன் 5%, அதானி பவர்%, அதானி வில்மர்5% என உயர்வுடன் முடிந்தன. அதானி கிரீன் 4%, அதானி டோட்டல் கேஸ் 5%, ஏசிசி 1.6, அம்புஜா சிமெண்ட் 0.1 சதவீதம் சரிந்தன
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையால் கடந்த 10 நாட்களில் 9 லட்சம் கோடி ரூபாயை இழந்த அதானி குழுமம் மீண்டு எழுகிறது. 2024ம் ஆண்டு முதிர்வடையும்  பங்குகளுக்கு முன்கூட்டியே கடனைச் செலுத்துவோம் என்று அதானி குழுமம் தெரிவித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தை 2வது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு:அதானி என்டர்பிரைசர்ஸ் லாபம்

இதனால் காலை முதல் மாலைவரை பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 377 புள்ளிகள் அதிகரித்து, 60,663 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 150 புள்ளிகள் ஏற்றம் பெற்று, 17,871 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிந்தன. எச்டிஎப்சிவங்கி, எச்யுஎல், கோடக் வங்கி,ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், லார்சன் அன்ட் டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்தன.

நிப்டி துறைகளில் உலோகம் அதிகபட்சமாக 3 சதவீதம் உயர்ந்தது, அதைத் தொடர்ந்து,மருந்துத்துறை, ஐடி, கட்டுமானம், எரிசக்தி,ஆட்டோமொபைல், வங்கித்துறை, பொதுத்துறை வங்கி,எப்எம்சிஜி துறைகளும் உயர்ந்தன

click me!