உங்கள் குழந்தை பிறந்த உடனேயே நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து, ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்தால், உங்கள் மகள் மேஜர் ஆவதற்கு முன்பு நீங்கள் எளிதாக ஒரு பெரிய தொகையைக் குவிக்கலாம்.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், அவள் வளரும்போது சுமார் 15 லட்சம் கிடைக்கும். இதற்கு ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தை பிறந்த உடனேயே நீங்கள் SIP திட்டத்தில் சேர்ந்து, ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் மகள் மேஜர் ஆவதற்கு முன்பு நீங்கள் எளிதாக ஒரு பெரிய தொகையை நீங்கள் பெறலாம்.
இந்த சிறிய முதலீடு பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அது சந்தை அபாயங்களையும் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீண்ட கால முதலீடு வேறு எந்த திட்டமும் இல்லாத வருமானத்தை தரும். முதலீட்டு வல்லுநர்கள் சிப் முதலீட்டின் சராசரி வருமானம் 12 சதவீதம் என மதிப்பிடுகின்றனர். சில சமயம் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தை பிறந்தவுடன், நீங்கள் ரூ. 1000 முதலீடு செய்யத் தொடங்கினால், 18 வயதிற்குள் 14 லட்சத்துக்கு மேல் குவிக்கலாம்.
இது தவிர, ஆண்டுதோறும் 10% டாப்-அப் செய்ய வேண்டும். எஸ்.ஐ.பி (SIP) முதலீட்டில் வழக்கமான பணத்துடன் கூடுதலாக செலுத்தப்படும் தொகை டாப்-அப் எனப்படும். ஒவ்வொரு ஆண்டும் டாப்-அப் செய்து முதலீட்டுத் தொகையை 10 சதவீதம் அதிகரிக்கவும். அதாவது இரண்டாம் ஆண்டில் ரூ.1000க்கு பதிலாக ரூ.1100 சேமிக்க வேண்டும். மூன்றாம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1210 முதலீடு செய்யுங்கள்.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்த ஃபார்முலா மூலம் 18 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், 18 ஆண்டுகளில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.5,47,190 ஆக இருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்கு ரூ.14,41,466 கிடைக்கும். இந்த முதலீட்டுத் தொகை மகளின் உயர்கல்வி மற்றும் பிற தேவையான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த முதலீட்டுக்கு 12 முதல் 15 சதவீதம் வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. 15 சதவீத வட்டி கிடைத்தால் மொத்தம் ரூ.19 லட்சம் கிடைக்கும்.