Bank license Canceled : இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. எந்த பேங்க் தெரியுமா?

By Raghupati RFirst Published Jul 6, 2024, 6:28 PM IST
Highlights

ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. அது எந்த வங்கி, அதில் எத்தனை பேருக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு வங்கியின் ரத்து செய்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சிம்ஷா சககார வங்கி நியாமிதா, மத்தூர் நிதி நிலைமை மோசமடைந்து வருவதால், அதன் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரத்து செய்துள்ளது. ஜூலை 5, 2024 அன்று வேலை நேரம் முடிந்ததும் வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியை மூடிவிட்டு ஒரு கலைப்பாளரை நியமிக்க உத்தரவிடுமாறு கர்நாடக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கியின் ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) இலிருந்து தனது டெபாசிட்டில் ரூ. 5 லட்சம் வரையிலான க்ளைம் தொகையைப் பெறுவதற்கு உரிமையுடையவர். இந்த கூட்டுறவு வங்கியின் டெபாசிட்தாரர்களில் சுமார் 99.96 சதவீதம் பேர் தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் DICGC யிடமிருந்து பெறுவதற்கு உரிமையுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Latest Videos

நேர்காணல் இல்லை.. தேர்வு மட்டுமே.. 770 கிளார்க் வேலைகள் காத்திருக்கு.. வங்கியில் சேர அருமையான வாய்ப்பு!

வங்கியிடம் போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லை என்றும், அதன் செயல்பாடுகள் அதன் டெபாசிடர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, தற்போதைய நிதி நிலை காரணமாக, வங்கி அதன் வைப்பாளர்களுக்கு முழுப் பணத்தையும் செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

4 புதிய கார்கள்.. 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஜூலை 24 தேதி குறித்த BMW.. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

click me!