stock market today: இன்றைய பங்குச்சந்தை nse, bse-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் 10 அம்சங்கள் ! தெரிஞ்சுக்குங்க

By Pothy RajFirst Published Jun 7, 2022, 8:58 AM IST
Highlights

share market today : stock market today : மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தநிலையில் இன்று காலையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வர்தத்கத்தில் இறங்கும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய 10 அம்சங்களை தெரி்ந்து கொண்டு இறங்கலாம்.

share market today :மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தநிலையில் இன்று காலையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வர்தத்கத்தில் இறங்கும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய 10 அம்சங்களை தெரி்ந்து கொண்டு இறங்கலாம்.

அமெரிக்கப் பங்கச்சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தை பெரிதான மாற்றத்துடன் நேற்று முடியவில்லை,சிறிய உயர்வுடனே முடிந்தது. அமேசான் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் சற்று உயர்ந்தன. அமெரிக்காவின் பணவீக்கம், வட்டிவீதம் உயர்வுதான் பெரும் எதிர்பார்ப்புகளைச் சந்தையில் ஏற்படுத்தியிருக்கிறது. எலான் மஸ்கின் அறிவிப்பால் ட்விட்டர் பங்கு விலை 1.5 சதவீதம் சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆசியப் பங்குச்சந்தை

ஆசிய பசிப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கமான சூழலைகாணப்படுகிறது. ஆஸ்திரேலிய பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப்போகிறதா என முதலீட்டாளர்கள் எதிர்பாரத்துள்ளனர். ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் சரிவுடனே முடிந்தன

எஸ்ஜிஎக்ஸ் நிப்டி

எஸ்ஜிஎக்ஸ் நிப்டி நேற்று 140 புள்ளிகள் சரிவுடன் முடிந்திருப்பதால் எப்படித் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை பேரல் 120 டாலராக அதிகரித்துள்ளது. சவுதி அரேபிய அரசு கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. அதேநேரம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பு உற்பத்தியை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வும் பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சீனப் பொருளாதாரம்

சீனாவின் சேவைத்துறை வளர்ச்சி தொடர்ந்து கடந்த மே மாதத்தில் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் இருந்ததால், சேவைத் துறை முடங்கியிருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களாக சேவைத்துறை வளர்ச்சி சரிந்துள்ளது. 

ஆர்பிஐ அறிவிப்பு

வங்கிஅல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்குபோது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், விதிகள் குறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த விதிகளும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்

ரஷ்யாவுடன் பேச்சு

ரஷ்யாவிலிருந்து அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வு தொடர்பாக மத்திய அரசு ரஷ்யாவிடம் பேச்சு நடத்தி வருகிறு. குறிப்பாக ராஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது

எலான் மஸ்க் எச்சரிக்கை
ட்வி்ட்டர் நிறுவனம் தன்னிடம் இருக்கும் போலிக்கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால், ரிசர்வ் தி ரைட் அடிப்படையில் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். 

பிட்காயின் லாபம்

பிட்காயின் மதிப்பு 5.2 சதவீதம் உயர்ந்து, 31,411 டாலராக நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் மதிப்பைவிட, கூடுதலாக 1,552 டாலர் அதிகரி்த்தது. பிட்காயின் மதிப்பும் இந்று சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்

அந்நிய முதலீட்டாளர்கள்
அந்நிய முதலீட்டாளர்கள் ரூ,2,397 கோடி மதிப்பிலான பங்குகளை நேற்று பங்குச்சந்தையில்விற்றுள்ளனர். ஏற்கெனவே இந்த ஆண்டில் மட்டும் ரூ.1.69 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்று அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறியது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், எப்ஐஐ வெளியேற்றமும் தாக்கத்தை ஏற்படுத்தும்


 

click me!