tmb : IPO வெளியிடும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: செபி அனுமதி

Published : Jun 07, 2022, 08:21 AM ISTUpdated : Jun 07, 2022, 11:01 AM IST
tmb :  IPO வெளியிடும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: செபி அனுமதி

சுருக்கம்

tmb : tmb banking: 100ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட :தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(TMB) பங்குச்சந்தையில் முதலீடு திரட்டுவதற்கு ஐபிஓ வெளியிட பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

tmb  100ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட :தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(TMB) பங்குச்சந்தையில் முதலீடு திரட்டுவதற்கு ஐபிஓ வெளியிட பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்குதாரர்களிடம் இருக்கும் 12 ஆயிரத்து 505 பங்குகள் மற்றும் புதிதாக ஒரு கோடியே 58 லட்சத்து 27ஆயிரத்து 495 பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது என்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டு மூலம் ரூ.36 கோடி நிதி திரட்ட டிஎம்பி வங்கி திட்டமிட்டுள்ளது. 

பங்குதாரர்களான டி பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மஹாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம் மல்லிகா ராணி, சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரன் ஐயர் ஆகியோர் வசம் இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

பங்கு வெளியீடு தொடர்பாக ஐபிஓ ஆவணங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செபியிடம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தாக்கல் செய்தது, அதற்கு கடந்த மே மாதம் 30ம் தேதி செபி அனுமதியளித்துள்ளது.

100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, குறு,சிறு, நடுத்தர தொழில் வைத்திருப்வர்கள், விவசாயிகள், சில்லரை வணிகர்கள் ஆகியோரை அதிக அளவில் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. 
2021, ஜூன்30ம்தேதி நிலவரப்படி, 509 கிளைகள் டிஎம்பி வங்கிக்கு உள்ளன. இதில் 247 வங்கிகள் சிறு நகரங்களிலும், 106 கிளைகள் கிராமங்களிலும், 80 கிளைகள் நகர்புறங்களிலும், 76 கிளைகள் மெட்ரோ நகரங்களிலும் செயல்படுகின்றன. 

ஏறக்குறைய 49.30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளன, இதில் 70சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கும்மேலாக வங்கியில் தொடர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு