
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று நேர்மறையாக, ஏற்றத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் 10 காரணிகள் என்னவென்று பார்க்கலாம்.
கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. முதல்பாதி நாட்கள் ஏற்றத்துடனும், கடைசி 2 நாட்கள் சரிவுடனும் வர்த்தகம் முடிந்தது. இந்த வாரம் பங்குச்சந்தையில் பல்வேறு காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக வாரத்தின் முதல்நாளான இன்று 10 அம்சங்கள் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படுகிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி| 10 மாதங்களில் இல்லாத அளவு சரிந்தது
அமெரிக்கப் பங்குச்சந்தை:
அமெரி்க்கப்பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்தது. அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம், வலுவான பொருளாதாரம் போன்றவற்றால் பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தும் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வாரம் அமெரி்க்கப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் வெளியாக உள்ளன. அது முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியப் பங்குச்சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்ததால், இன்று ஆசியப் பங்குச்சந்தையின் செயல்பாட்டையும் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். ஜப்பான், தென்கொரியா,ஹாங்காங் பங்குச்சந்தை காலை மந்தமாகத் தொடங்கியுள்ளன.
நிப்டி
தேசியப் பங்குச்சந்தையில் இன்று நிப்டி ஏற்றத்துடன் தொடங்கலாம். சிங்கப்பூர் நிப்டி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால், அதன் தாக்கத்தால் தேசியப்பங்குச்சந்தை நிப்டியும் ஏற்றத்துடன் தொடங்கலாம்.
பெடரல் ரிசர்வ் வட்டி
அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்துவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வட்டி வீதம் 4.50 சதவீதத்தில் இருந்து 4.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடக்கும் கூட்டத்தில் வட்டி மேலும் அதிகரி்க்கும். இந்த ஆண்டுக்குள் 5 முதல் 5.25% வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெடரல் ரிசர்வ் வட்டியை அதிகரிக்கும்போது மற்றநாட்டு கரன்சிகளுக்குநெருக்கடி ஏற்படும்.
பங்குச்சந்தை| 3 நாட்களுக்குப்பின் சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி:உலோகம், ஐடி பங்கிற்கு அடி
டாலர் மதிப்பு
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகின்றன. இதை அடிப்படையாகவைத்து டாலர் மதிப்பு வலுப்பெறுமா என்று முடிவாகும்.
இந்தியாவில் அந்நிய முதலீடு
கடந்த வாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச்ச ந்தையில் ரூ.7600 கோடி முதலீடு செய்துள்ளனர். அதற்கு முந்தைய வாரம் ரூ.3920 கோடி முதலீடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.28,852 கோடி முதலீட்டை திரும்ப எடுத்துள்ளனர், 2023ம் ஆண்டில் இதுவரை ரூ.38,524 கோடி முதலீட்டை எடுத்துள்ளனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தியதன் விளைவு இந்தியச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்தனர்.
அந்நிய முதலீடு
கடந்த வாரத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்(எப்ஐஐ) ரூ.624 கோடிக்குபங்குகளை வாங்கியுள்ளனர், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.86 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். இந்த சாதகமான போக்கு இன்று சந்தையில் காணப்படும்.
இந்திய ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 3 முதல் 5 சதவீதம் வரை உயரும் என்று 44500 கோடி டாலராக அதிகரிக்கும் என்ற செய்தி, சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
மார்ச் 31-க்குள் முதலீடு செய்யுங்க| மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் தரும் அரசு பென்ஷன் திட்டம் முடிகிறது
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமை பேரலுக்கு 2 டாலர் குறைந்தது. சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலையும் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்
எப்அன்ட் ஓ
பிப்ரவரி மாதக் கடைசி என்பதால், பல்வேறு ஒப்பந்தங்கள் புதுப்பிப்பு மற்றும் நிறைவடையும்என்பதால் அதுவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.