share market today அதள பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் மோசமான வீழ்ச்சி: உலோகம், ஐடி பங்குகள் அடி

By Pothy RajFirst Published May 19, 2022, 10:34 AM IST
Highlights

share market today: சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

ரஷ்யா உக்ரைன் போர்

Latest Videos

சர்வதேச சந்தையில் சாதகமான போக்குகாணப்படாதது இந்தியப் பங்குச்சந்தையிலும், ஆசியப் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை.இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வளரும் பொருளதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் கொரோனா பிடியிலிருந்து பொருளாதாரம் மீள்வதை கச்சா எண்ணெய் விலை உயர்வு தடுக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தையும், சரிவிலிருந்து பொருளாதாரம் மீள்வதை பாதிக்கும் என்று சர்வதேச நிறுவனமான கோல்டுமென் சாஸ் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

இது தவிர நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது, அதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவதும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க பெடரல் வங்கியும் தங்கள் நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெறுவது அதிகரித்து வருகிறது. இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்க்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது, பங்குச்சந்தையிலும் சரிவை கொண்டு வருகிறது.

ஆசியச் சந்தையான சியோல், ஹாங்காங், டோக்யோ சந்தைகளும் இன்று சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கின. இதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும் இருந்து வருகிறது. 

வீழ்ச்சி

மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் 1100 புள்ளிகள் சரிந்து, 53,182 புள்ளிகளில் நடந்து வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 305 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 15,934 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. 

சரிவு

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 பங்குகளும் சரிவுடனே தொடங்கின. டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, விப்ரோ, பஜாஜ் ட்வின்ஸ், இன்போசிஸ், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில் ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், அதானி துறைமுகம், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில் தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கித்துறை பங்குள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஊடகம, நிதிச்சேவை, வங்கிகள், ஆட்டோமொபைல் துறைப் பங்குகளும் சரிவில் உள்ளன

click me!