அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

By vinoth kumar  |  First Published May 19, 2022, 7:36 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.  

எண்ணெய் நிறுவனங்கள்

Tap to resize

Latest Videos

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

undefined

கடந்த பிப்ரவரி மாதம், மார்ச் மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உச்சம் தொட்டது. கடந்த பிப்ரவரியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து ரூ.967ஆக விற்பனையானது. பின்னர் மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ரூ.1015.50ஆக விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மேலும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டதை அடுத்து ரூ.1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்து சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!