axis bank share: இஎம்ஐ அதிகரிக்கும்: ஆக்சிஸ் வங்கி எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தியது

By Pothy RajFirst Published May 18, 2022, 5:21 PM IST
Highlights

axis bank share :ஆக்சிஸ் வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் இன்று(மே18) முதல் அமலுக்கு வந்துள்ளது

ஆக்சிஸ் வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் இன்று(மே18) முதல் அமலுக்கு வந்துள்ளது

கடனுக்கான இறுதிநிலை செலவு வீதம்தான் பல்வேறு விதமான கடன்களுக்கான வட்டிவீதத்தை தீர்மானிக்கும் கருவியாக இருந்து வருகிறது. இதில் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், ஆக்சிஸ் வங்கியில் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் பெற்று மாதத்தவணை செலுத்துவோர் கூடுதலாக இனிமேல் செலுத்த வேண்டியதிருக்கும்.

இதற்கு முன் எம்சிஎல்ஆர் ரேட் 7.20சதவீதம் இருந்த நிலையில் இனிமேல் 7.55 சதவீதமாக அதிகரிக்கும். 3 மாதத்துக்கான எம்சிஎல்ஆர் 7.30 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதமாகவும், 6 மாதத்துக்கான எம்சிஎல்ஆர் 7.70 சதவீதமாகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டுக்கான் எம்சிஎல்ஆர் 7.40 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகவும், 2 ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் 7.50 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு 7.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது.  அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வங்கிகளும் எம்சிஎல்ஆர், ரெப்போ ரேட், டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியும் கடந்தவாரம் எம்சிஎல்ஆர் ரேட்டை 10 புள்ளிகள் உயர்த்தியது. 2 மாதங்கள் இடைவெளியில் கடன் வழங்குவதற்கான எம்சிஎல்ஆர் கட்டணத்தை 2-வது முறையாக ஸ்டேட் பேஃங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியது. இதற்கு முன் எம்சிஎல்ஆர் ரேட் 6.75 சதவீதம் இருந்த நிலையில் இனிமேல் 6.85 சதவீதமாக அதிகரிக்கும்.

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கால அளவிலும் எந்தக் தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது

அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தன. இதற்கு கடன் விகித இறுதிநிலைச் செலவு(மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) (எம்சிஎல்ஆர்) என்று பெயர். முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது


 

click me!