adani: மருத்துவத்துறையில் கால் பதிக்கிறது அதானி குழுமம்: மருத்துவமனை, ஆராய்ச்சி மையங்கள் அமைக்கிறது

By Pothy RajFirst Published May 19, 2022, 10:06 AM IST
Highlights

adani : adani share price: தொழில், வர்த்தகம், சமையல் பொருட்கள் ஆகியவற்றில் மட்டும் கோலோச்சிவரும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் மருத்துவத்துறையிலும் தடம் பதிக்கிறது. மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் இறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொழில், வர்த்தகம், சமையல் பொருட்கள் ஆகியவற்றில் மட்டும் கோலோச்சிவரும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் மருத்துவத்துறையிலும் தடம் பதிக்கிறது. மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் இறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதானி ஹெல்த் வென்சர்ஸ்(ஏஹெச்விஎல்) என்ற பெயரில் மருத்துவத் துறையில் அதானி குழுமம் இறங்க இருக்கிறது. மருத்துவமனைகள், ஆராய்ச்சி மையங்கள், பரிசோதனை மையங்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றை அதானி குழுமம் அமைக்க இருக்கிறது.

இது தொடர்பாக அதானி குழுமம் மும்பைப் பங்குச்சந்தை பைலிங்கில் இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது. அதில் “ அதானி குழுமம் அதானி ஹெல்த் வென்சர்ஸ் என்ற பெயரில் மருத்துவம் சார்ந்த வர்த்கத்தில் ஈடுபட இருக்கிறது. இதற்கான பங்கு முதலீடாக தலா ரூ.ஒரு லட்சம் செலுத்தப்படுகிறது. விரைவில் அதானி ஹெல்த் வென்சர்ஸ் சரியான நேரத்தில் வர்த்தகத்தைத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளது. 

முதல்கட்ட தகவலில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி,  மருத்துவ வசதிகள் ஏற்படுத்துதல், குறிப்பாக மருத்துவமனைகளை விலைக்கு வாங்குதல், பரிசோதனை மையங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியானது. 

குறிப்பாக மருந்துத்துறையில் அதிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் அதானி குழுமம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டிலிருந்து அதானி குழுமம் 30 பல்வேறு நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து அம்புஜா, ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது. ஏற்கெனவே அதானி குழுமம் துறைமுகம், விமானநிலையங்கள், மின்சக்தி, மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றில் வலிமையாக இருக்கும் போது, நாட்டின் 2-வதுமிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக மாறியது.

நடப்பு நிதியாண்டில் பொருளதார ஆய்வறிக்கையின்படி மருத்துவத்துறை 349.10 பில்லியன் டாலரை எட்டும் என கணக்கப்பட்டுள்ளது. நாட்டின் மருத்துவத்துக்கான பொதுச்செலவு 2.1 சதவீதமாக ஜிடிபியில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020-21ம் ஆண்டில் 1.8% இருந்தது, 2019-2020ல் 1.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!