share market today:முதலீட்டாளர்கள் தயக்கம்; சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி: உலோகம், வங்கித்துறை படுவீழ்ச்சி

By Pothy RajFirst Published Apr 22, 2022, 3:50 PM IST
Highlights

share market today : கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் முடிந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் முடிந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

பெடரல் வங்கி

அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தப் போவதாக வெளியான அறிவிப்பையடுத்து, மும்பை மற்றம் தேசியப் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணாக அமைந்தது.

 அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.இதைக் கட்டுப்படுத்த அமெரிக் பெடரல் வங்கி ஏற்கெனவே 25 புள்ளிகள் வட்டிவீதத்தை உயர்த்தியிருக்கிறது. வரும் மே மாதத்தில் குறைந்தபட்சம் 50 புள்ளிகள் வட்டி உயர்த்தப்படும் என பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

தயக்கம்

இந்த அறிவிப்பால் அமெரிக்காவின் நாஷ்டாக் 1.2% சரிந்தது, குறிப்பாக தொழில்நுட்பத்துறை பங்குகள் பெருத்த அடிவாங்கின. ஆசியாவிலும் ஜப்பானின் நிக்கி 2 சதவீதம், தைவானின் கோஸ்பி ஒரு சதவீதம் சரிந்தன. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி லாபமீட்டும் நோக்கில் பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு காணப்படுகிறது

அதுமட்டுமல்லாமல் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் ரூ.89ஆயிரம் கோடிக்கு மட்டுமே முதலீடு வந்துள்ளது மிகக்குறைவாகும். இதுவும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 

ரகுராம் ராஜன்

இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தும் நிப்டி 180 புள்ளிகள் சரிந்தும், வர்த்தகத்தைத் தொடங்கியது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ஹெச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் லாபத்துடன் இருந்ததால் பங்குசந்தை சரிவிலிருந்துமீண்டது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில், “ சிறுபான்மையினருக்கான இந்தியாவின் தோற்றம்உலகளவில் இந்தியப் பொருட்களின் சந்தையை இழக்கநேரிடும்” என எச்சரித்திருந்தார். ஏற்றத்திலிருந்த பங்குச்சந்தையில் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது

வீழ்ச்சி

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 714 புள்ளிகள் சரிந்து, 57,196 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 228 புள்ளிகள் குறைந்து, 17,164 புள்ளிகளில் நிலைபெற்றது. 

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 5 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் முடிந்தன. மற்ற 25 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன. 1447 பங்குகள் விலை ஏற்றம் கண்டது, 1882 பங்குகள் மதிப்பு சரிந்தது, 115 பங்குகள் மாறவில்லை.

நிப்டி முழுமையாகச் சரிவு

நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, சிப்லா, இன்டஸ்இன்ட்வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. அதானி போர்ட்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல், ஐடிசி, மாருதி சுஸூகி ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன
நிப்டியில் அனைத்து துறைகளும் எதிர்மறையான நிலையில் முடிந்தன. குறிப்பாக உலோகம், வங்கித்துறை பங்குகள் மோசமாகச் சரிந்தன. உலோகத்துறை பங்குகள் 2 சதவீதமும், வங்கித்துறை 1.92 சதவீதமும் சரிந்தது.
 

click me!