credit card and debit card: கிரெடிட், டெபிட் கார்டு : ஆர்பிஐ புதிய விதிகள் தெரியுமா: தினசரி 500 ரூபாய் அபராதம்

Published : Apr 22, 2022, 02:30 PM IST
credit card and debit card: கிரெடிட், டெபிட் கார்டு : ஆர்பிஐ புதிய விதிகள் தெரியுமா: தினசரி 500 ரூபாய் அபராதம்

சுருக்கம்

credit card and debit card : கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு இயக்கம் ஆகியவற்றுக்கு புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு இயக்கம் ஆகியவற்றுக்கு புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு குறித்த வழிகாட்டல்கள் 2022 , வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த புதிதகள் கிரெடிட் கார்டு வழங்கும் ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட வங்கிக்கும், வங்கிசாராத நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். 

கிரெடிட் கார்டை ரத்து செய்யும் கோரிக்கை

வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று வங்கிக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை அடுத்த 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அந்த கார்டில் ஏதேனும் பணம் செலுத்துவது இருந்தாலும் அதை முடிக்க வேண்டும். 

கிரெடிட் கார்டு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அது குறித்த தகவலை கார்டு வைத்திருந்தவருக்கு மின்அஞ்சல், எஸ்எம்எஸ், செல்போன் மூலம் கார்டு வழங்கிய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கார்டு தேவையில்லை என்று கோரிக்கை வைக்கும்போது, அதற்குரிய வாய்ப்பை நிதி நிறுவனங்கள், வங்கிகள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வாடிக்கையாளர்கள், உதவிஎண்கள், மின்அஞ்சல், ஐவிஆர், இணையதளம், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அணுகுமாறு இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று திரும்ப ஒப்படைக்க விரும்பினால் அந்தவிண்ணப்பத்தை வங்கிகள், நிதி நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.500 அபராதமாக கார்டு ரத்து செய்யும்வரை வழங்க வேண்டும்

ஒரு கிரெடிட் கார்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால், கார்டு வைத்திருப்போருக்கு தகவல் அளித்துவிட்டு, கார்டை ரத்து செய்யும் பணியை வங்கிகள் தொடரலாம். தகவல் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் கார்டு வைத்திருப்போரிடம் இருந்து எந்தத் தகவலும் வராவிட்டால், அந்த கார்டை வங்கிகள், நிறுவனங்கள் ரத்து செய்யலாம். 

கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் அந்த கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் அதை செயல்பாட்டுக்கு கொண்டுவரும்போது, வாடிக்கையாளருக்கு வரும் ஓடிபி அடிப்படையில்தான் செயல்படுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டை திரும்பஒப்படைக்கும் வாடிக்கையாளரிடம் ஒப்புதல் கிடைத்தபின், அடுத்த 7 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கை கார்டு வழங்கிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் எந்தவிதமான கட்டணமின்றி முடிக்க வேண்டும்

வட்டி வீதம் இதர கட்டணங்கள்

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு கார்டுக்குரிய வட்டி வீதம், பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் விதிக்கப்படும் வட்டி குறித்து இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். 

எந்தவகையில் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை உதாரணங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகளுக்கு பில் செலுத்தும்போது குறைந்தபட்ச கட்டணம், நிபந்தனைகள், வட்டி வீதம் ஆகியவற்றை வங்கிகள் விளக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வழங்கும்போது எந்தவிதமான மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வட்டி இருந்தால், அதை கடன் செலுத்தும் தொகையில் கழிக்கக் கூடாது. 

கிரெடிட் கார்டு வாங்குவோருக்கு வட்டி வீதம் குறித்த அனைத்து விவரங்கள் குறித்த விவரங்களை அறி்க்கையாக வழங்கிட வேண்டும்

இவ்வாறுரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு