
தேசிய பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை இன்று தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கி வருகிறார்கள்
சாதகமான சூழல்
சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, நிறுவனங்களின் 4-வது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின.
ஏற்றம்
தொடர்ந்து 2-வது நாளாக மும்பை, தேசியப்பங்குசந்தையில் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டு, வர்தத்கம் காலை முதல் உற்சாகமாக நடந்து வருகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் கடந்த 6 மாதங்களில் இல்லாதஅளவு நேற்று ஏற்றத்துடன் முடிந்தது. இந்த எதிரொலி என்று பங்குச்சந்தையிலும் காணப்படுகிறது.
சீனாவில் குறையாமல் இருக்கும் கொரோனா வைரஸ், லாக்டவுன் போன்றவை முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும், அதனால் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் சீனாவில் நிலவும் கொரோனாவால் உலகப் பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் முதலீட்டாளர்கள் கவனமாக உள்ளனர்.
காலாண்டு முடிவுகள்
உள்நாட்டு நிறுவனங்கள் குறிப்பாகநிப்டியில் உள்ள நிறுவனங்களின் 4-வது காலாண்டு முடிவுகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆக்சிஸ் வங்கி நிகர லாபம் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இது தவிர மாருதி சுஸூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
உயர்வு
இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பை 200 புள்ளிகள் உயர்ந்தது. வர்தத்கம் தொடங்கியும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 217 புள்ளிகள்உயர்ந்து, 57,738 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 60 புள்ளிகள் அதிகரித்து, 17,305 புள்ளிகளில் வர்தகத்தை நடத்தி வருகிறது. 1436 பங்குகள் மதிப்பு ஏற்றத்துடனும், 463 பங்குகள் மதிப்பு சரிந்தும், 82 பங்குகள் மதிப்பு மாறாமலும் உள்ளன.
நிப்டியில் ஓஎன்ஜிசி, சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், யுபிஎல் ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக லாபமடைந்தந. எஸ்பிஐ லைப்இன்சூரன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், டிவிஸ் லேப்ஸ், ஹெச்யுஎல் நிறுவனப் பங்குகள் சரிந்தன
லாபம் உற்சாகம்
30 முக்கிய நிறுவனப்பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 5 நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன.குறிப்பாக மாருதி சுஸூகி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, பவர்கிரிட்,நெஸ்ட்லே இந்தியா ஆகியபங்குள் சரிந்துள்ளன. மற்ற பங்குகள் லாபத்தில் உள்ளன
மும்பைப்பங்குச்சந்தையில் சன் ஃபார்மா, டாக்டர்ரெட்டீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், கோடக் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன. டாடா கன்சூமர், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி பங்குகளும் லாபத்தில் நகர்கின்றன. நிப்டியில் அனைத்து துறைப் பங்குகளும் லாபத்தில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.