excise duty on petrol diesel : ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உண்மையில் நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா?

Published : Apr 29, 2022, 09:38 AM ISTUpdated : Apr 29, 2022, 09:39 AM IST
excise duty on petrol  diesel : ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உண்மையில் நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா?

சுருக்கம்

excise duty on petrol  diesel : மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தியாவசியப் பொருளாகிவிட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டாலும் உண்மையில் அதன் அடக்கவிலை என்ன என்று தெரியுமா, ஒருலிட்டருக்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தியாவசியப் பொருளாகிவிட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டாலும் உண்மையில் அதன் அடக்கவிலை என்ன என்று தெரியுமா, ஒருலிட்டருக்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

3 அம்சங்கள்

பொதுவாக சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் 3 விதமான அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது, முதலாவதாக அடிப்படை விலை(பேஸ் ப்ரைஸ்),  மத்திய அரசின் உற்பத்தி வரி, மாநில அரசின் வாட் வரி ஆகியவற்றை சேர்த்து விற்கப்படுகிறது

இந்தியாவில் பெட்ரோல், டீசல் இந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறதென்றால் அதற்கு மத்தியஅரசின் உற்பத்தி வரி, மாநில அரசுகளின் வாட்வரிதான் பெரும்பகுதி காரணமாகும். மத்திய அரசின் உற்பத்தி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்றாலும், வாட் வரி ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும். இந்த இரு வரிகள்தான் நுகர்வோர்களை வாட்டி வதைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது

வரி குறைப்பு

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மீது உற்பத்தி வரியை 5 ரூபாயும், டீசல் மீது 10ரூபாயும் குறைத்தது. அதன்பின் வரிக்குறைப்பு இல்லை, மாறாக விலை உயர்வுதான் இருக்கிறது. மத்திய அரசு உற்பத்தி வரியைக் குறைத்ததால் பாஜக ஆளும் மாநிலங்கள் குஜராத், உ.பி, கர்நாடகா, கோவா, மணிப்பூர், அசாம், பிஹார், திரிபுரா மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்தன. ஆனால், பாஜக அல்லாத பிறகட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரியைக் குறைக்கவில்லை.

பிரதமர் குற்றச்சாட்டு

இது குறித்து பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன், மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அப்போது, “ பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துவிட்டது. ஆனால், சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காமல் மக்களை சிரமப்படுத்துகின்றன.குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மே.வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்டமாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்பதில்லை. வரியையும் குறைக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

வருவாய் இழப்பு

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கடந்த நவம்பரில் குறைத்ததால், மாதத்துக்கு ரூ.8700 கோடி இழப்பு ஏற்படுகிறது. குஜராத் மாநிலம் வாட் வரியைக் குறைத்ததால் இதுவரை ரூ4ஆயிரம் கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.5 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால், வாட் வரியைக் குறைக்காமல் 7 மாநிலங்கள் ரூ.12 ஆயிரம் கோடி  லாபமடைந்தன என்று பிரதமர் மோடி விமர்சித்தார். அந்த வகையில் தமிழகம் ரூ.2,420 கோடி, தெலங்கானா, ஆந்திரா தலா ரூ.1450 கோடி லாபமடைந்தன

 

கடந்த 4 மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தி பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்க ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறு விலை கணக்கிடப்படுகிறது

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.105.41, டீசல் லிட்டர் ரூ.96.67க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் லி்ட்டர் ரூ.120.51, டீசல் ரூ.104.77க்கு விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.110.15க்கும், கொல்கத்தாவில் லிட்டர் ரூ.115.12க்கும் விற்கப்படுகிறது

உண்மையில் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வரும் பெட்ரோலுக்கு அடிப்படைவிலை லி்ட்டர் ரூ.56.32 ஆகவும், டீசலுக்குரூ.57.94 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. போக்குவரத்துச் செலவாக பெட்ரோலுக்கு 20பைசாவும்,டீசலுக்கு 22பைசாவும் சேர்க்கப்படுகிறது.

டீலர்களுக்கு பெட்ரோல் லிட்டர் ரூ.56.52க்கும், டீசல் ரூ.58.16க்கும் விற்கப்படுகிறது. டீலர்களுக்கு கமிஷனாக பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.3.86 பைசாவும், டீசலில் ரூ.2.59 பைசாவும் வழங்கப்படுகிறது.

3-வதாக பெட்ரோல் மீது மத்திய அரசின் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.27.90, டீசலில் லிட்டருக்கு ரூ.21.80 விதிக்கப்படுகிறது. அடுத்ததாக வாட் வரி விதிக்கப்படுகிறது. இது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.17.13, டீசல் மீது ரூ.14.12 நிர்ணயிக்கப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் லிட்டர் ரூ.105.41, டீசல் லி்ட்டர் ரூ.9667க்கு விற்கப்படுகிறது.

உண்மை நிலவரம்

ஆனால்இந்தியன் ஆயில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, டெல்லியில் பெட்ரோலுக்கு அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.56.32, போக்குவரத்து செலவு 20 பைசா, என லிட்டர் ரூ.56.32க்கு டீலர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் டெல்லியில் பெட்ரோலின் உண்மையான விலை. உற்பத்திவரி, வாட்வரி, டீலர் கமிஷன் என சேர்க்கப்பட்டு பெட்ரோல் லிட்டர் ரூ.105.41க்கு விற்கப்படுகிறது

 

 

அதிகவரி

அதிகபட்சமாக மகாராஷ்டிரா(ரூ.52.50) ஆந்திரா(ரூ.52.40), தெலங்கானா(ரூ.51.60) ஆகிய மாநிலங்கள் அதிகபட்சமாக வாட் வரி வசூலிக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் , கேரளா, பிஹார்ஆகிய 7 மாநிலங்களில் உள்ள மக்கள் பெட்ரோலின் உண்மையான விலையைவிட வரிதான் அதிகமாக செலுத்துகிறார்கள். 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!