share market today:பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்; கரடி ஆதிக்கம்: 2-வது நாளாக சென்செக்ஸ் சரிவு: ரிலையன்ஸ் லாபம்

Published : Apr 27, 2022, 03:52 PM ISTUpdated : Apr 27, 2022, 03:53 PM IST
share market today:பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்; கரடி ஆதிக்கம்: 2-வது நாளாக சென்செக்ஸ் சரிவு: ரிலையன்ஸ் லாபம்

சுருக்கம்

share market today :மும்பை, தேசியப்பங்குச் சந்தை தொடர்ந்து 2-வது நாளாக இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது

மும்பை, தேசியப்பங்குச் சந்தை தொடர்ந்து 2-வது நாளாக இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது

பெடரல் வங்கி

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மே மாதத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படும் என பெடரல் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்நிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச காரணிகள், சீன லாக்டவுன், ரஷ்யா உக்ரைன் போர், ஆகியவை முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு குறையத் தொடங்கும். உலகளவில் பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்று அஞ்சி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபமீட்டத் தொடங்கினர். இதனால் பஜாஜ், ஐசிஐசிஐபங்குகள் பெருத்த அடிவாங்கின. 

சீனாவில் லாக்டவுன்

சீனால் கொரோனா பரவல் குறையாமல் இருந்து வருகிறது. பல்வேறு நகரங்கள் இன்னும் லாக்டவுன் பிடியில்தான் இருக்கின்றன. இதனால் பொருட்கள் சப்ளை உலகளவில் பாதிக்கப்படலாம், பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுகிறார்கள்

உக்ரைன் மீதான பிடியை இறுக்கி வரும் ரஷ்யா, போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு இயற்கைஎரிவாயு அனுப்ப ரஷ்யா மறுத்துவிட்டது. அந்த நாடுகள் ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

பஜாஜ் பங்கு பெருத்த சரிவு

பஜாஜ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில்84 சதவீத நிகர லாபமீட்டியபோதிலும்கூட இன்று சந்தையில் பஜாஜ் நிறுவனப்பங்குகள் 5 % வீழ்ச்சி அடைந்தன.  எல்ஐசி ஐபிஓ மே 4 முதல் 9ம் தேதியும், 17ம் தேதி சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு லிஸ்டிங் செய்தபின் மாற்றம் ஏற்படக்கூடும். 

தொடர் வீழ்ச்சி

இன்று காலை மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே, சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது இது வர்த்தகம் முடியும் வரை நீடித்தது.  மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 537 புள்ளிகள் சரிந்து, 56,819 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 162 புள்ளிகள் குறைந்து, 17,038 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 1146 பங்குகள் மதிப்பு உயர்ந்தன, 2140 பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது, 107 பங்குகள் மதிப்பு நிலையாக இருக்கிறது

ரிலையன்ஸ் லாபம்

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 25 பங்குகள் சரிந்தன. 5 நிறுவனப் பங்குகள்மட்டுமே லாபமடைந்தன. டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல்,டிசிஎஸ், கோடக் வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே லாபமடைந்தன.

 மற்ற 25 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன. குறிப்பாக லார்சன் அன்ட்டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ட்வின்ஸ், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.

நிப்டி

நிப்டியில் ஊடகத்துறை பங்குக மட்டுமே ஓரளவுக்கு லாபமீட்டன.   மற்ற துறைகளான வங்கி நிதிச்சேவை, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சக்தி, வங்கி, துறை பங்குகள் ஒருசதவீதம் சரிந்தன. தகவல்தொழில்நுட்பம், வங்கி, ஆட்டமொபைல்  பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 

நிப்டியில் ஹீரோ மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ்  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டாடா கன்சூமர் , அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில்முடிந்தன


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்