narendra modi coronovirus vattax CMs :பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் குறைக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் குறைக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
உற்பத்தி வரி குறைப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் மீது உற்பத்திவரியை ரூ.5 டீசலுக்கு ரூ.10 மத்திய அரசு குறைத்தது. இதேபோன்று மாநிலங்களும் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் வாட் வரியைக் குறைத்தன.
விலைவாசி உயர்வு
ஆனால், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளின்அரசுகள் வாட் வரியைக் குறைக்க மறுத்துவிட்டன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் போது பெட்ரோல், டீசல் விலை எகிறுகிறு, அதனால் பணவீக்கம் உயர்ந்து மத்திய அரசு நெருக்கடி ஏற்படுகிறது
இந்நிலையில் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுவதையடுத்து மாநில அரசுகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்தாய்வு நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது
வரியைக் குறைக்கவில்லை
பெட்ரோல் டீசல் மீதான வரிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உற்பத்தி வரியைக் குறைத்தது. மத்திய அரசு வரிக்குறைப்பு செய்தது போன்று மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தினோம். சில மாநிலங்கள் வரியைக் குறைத்து ,அதன்பலனை நுகர்வோர்களுக்கு வழங்கின. பல மாநிலங்கள் வரியைக் குறைக்கவில்லை.
குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா, மே.வங்கம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரைகளை பின்பற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியையும் குறைக்கவில்லை. இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும்,விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் கடந்த நவம்பர் மாதம் செய்ததைப் போன்று இந்த மாநில அரசுகளும் வரியைக் குறைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன். வாட் வரியைக் குறைத்து மக்களின் மீதான சுமையைக் குறைக்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்