
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை பதற்றமில்லாமல் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. கடந்த 3 நாட்களாக பெரும் சரிவில் தொடங்கிய நிலையில் இன்றைய வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தஅந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்திவருவது உலக நாடுகளின் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.
பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியது காரணமாக இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்தது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக், ஐரோப்பியப் பங்குச்சந்தையும் நேற்று சரிவுடன் முடிந்தன. அந்த பாதிப்பு இந்தியச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. மாறாக உள்நாட்டு முதலீட்டாளர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் அந்த சரிவிலின் பாதிப்பிலிருந்து இந்தியச் சந்தை தப்பியது. ஆனாலும், அந்நிய முதலீட்டாளர்கள் ப ங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறுவது குறையவில்லை.
இன்று காலை மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் ஏற்றத்துடன்தான் தொடங்கியது. ஆனால், சிறிது நேரத்திலேயே சரியத் தொடங்கியது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிந்து, 54,396 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 32 புள்ளிகள் குறைந்து, 16,269 புள்ளிகளில் வர்த்தக்தை நடத்தி வருகிறது.
ஏசியன் பெயின்ட்ஸ் லாபம்
30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், 8 நிறுவனப் பங்குகள் சரிவிலும், 22பங்குகள் லாபத்திலும் நகர்கின்றன. குறிப்பாக டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர்கிரிட், ஐசிஐசிஐ, டைட்டன், இன்போசிஸ், ரிலையன்ஸ் பங்குகள் சரிவில் உள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ் 4-வது காலாண்டு முடிவுகள் வெளியாவதால் அந்த நிறுவனப்பங்குகள் நல்ல லாபத்தோடு நகர்கின்றன.
மாருதி, இந்துஸ்தான் யுனிலீவர், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் 3 சதவீதம் உயர்வுன் நகர்கின்றன. பிரிட்டானியா, ஸ்ரீ சிமெண்ட் பங்குகள் நிப்டியில் நல்ல லாபத்துடன் நகர்கின்றன.
நிப்டியில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஊடகம், பொதுத்துறை வங்கிப் பங்குகள்லாபத்துடன் நகர்கின்றன. தகவல் தொழில்நுட்பம், உலோகம், மின்சக்தி பங்குகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.