
இந்த வர்த்தகத்தின் கடைசி நாளன இன்று பங்குச்சந்தை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி புள்ளிகள் சற்றே உயர்வுடன் வர்தத்கத்தை முடித்தன
இதையும் படிங்க: 3-வது நாளாக பங்குச்சந்தையில் ஏற்றம்: காளையின் ஆதிக்கத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
ஏற்ற இறக்கம்
ரஷ்யா உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேறம் அடைந்திருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது போன்ற உலகக் காரணிகள் சாதகமாக இருந்தபோதிலும்கூட இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இதைப்படிங்க: தேர்தல்முடிவுகள்: பங்குச்சந்தையில் குஷி: சென்செக்ஸ் 1200 புள்ளிகள் உயர்வு
அன்னிய முதலீட்டாளர்கள்
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜகஆட்சியைப் பிடித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்ததால் நேற்று வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. ஆனால் கடந்த 10 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 1500 கோடிக்கும் அதிகமான ரூபாயை சந்தையிலிருந்து வெளியே எடுத்தது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதைவிட அதிகமாகவே முதலீடு செய்துள்ளனர்.
இதனால் பங்குச்சந்தையில் தொடர்ந்து ஊசலாட்டத்துடனே காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து, 55,550 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 26 புள்ளிகள் சரிந்து, 16,521 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது.
பாதி லாபம், பாதி சரிவு
மும்பைப் பங்குச்சந்தையில் 15 பங்குகள் சரிவுடனும், 15 பங்குகள் லாபத்துடனும் வர்த்தகத்தை முடித்தன. சிப்லா, சன் ஃபார்மா, பிபிசிஎல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஐஓசி, பவர் கிரிட், கோல் இந்தியா, ஐடிசி ஆகிய பங்குகள் லாபத்தில் முடிந்தன. நெஸ்டில் இந்தியா, மாருதி சுஸூகி, டாடா நுகர்வோர் பொருட்கள், டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஹின்டால்கோ, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, எய்சர் மோட்டார்ஸ், டிசிஎஸ் பங்குகள் சரிவில் முடிந்தன துறைவாரியாகப் பார்த்தால், ஐடி,ஆட்டோமொபைல், ஊடகத்துறை பங்குகள் சரிவில் முடிந்தன. மாறாக மருந்துத்துறை பங்குகள் லாபத்தில் முடிந்தன
இதைப் படிக்க மறக்காதிங்க: Share market today: பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு
ஊசலாட்டம்
ஜூலியஸ் பியர் சந்தை ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிலந்த் கூறுகையில் “ 5 மாநிலத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது அதுவும் சாதகமாக அமைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்ததாக அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரி்ககாவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துவிட்டதால், வட்டி வீதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீட்டை எடுப்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது. இதனால்தான் முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீட்டை எடுப்பதா அல்லது, தொடர்ந்து முதலீடு செய்வதா என்ற ஊசலாட்டத்தில் இருந்தனர்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.