LIC IPO: முதலீ்ட்டாளர்களுக்குத் தூண்டில் போட்ட எல்ஐசி: 3-வது காலாண்டில் வியக்க வைத்த நிகர லாபம்

Published : Mar 11, 2022, 02:28 PM IST
LIC IPO:  முதலீ்ட்டாளர்களுக்குத் தூண்டில் போட்ட எல்ஐசி: 3-வது காலாண்டில் வியக்க வைத்த நிகர லாபம்

சுருக்கம்

LIC IPO:எல்ஐசி பங்குவிற்பனை விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், டிசம்பர் மாதத்தோடு முடியும் 3-வது காலாண்டில், எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.234.91 கோடியாக அதிகரித்துள்ளது.

எல்ஐசி பங்குவிற்பனை (lic ipo)  விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், டிசம்பர் மாதத்தோடு முடியும் 3-வது காலாண்டில், எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.234.91 கோடியாக அதிகரித்துள்ளது.

எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கும் பங்குகளில் 5% மட்டும் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்காக எல்ஐசி நிறுவனம் வரைவு அறிக்கையை செபியிடம் தாக்கல் செய்து அதற்கான அனுமதியும், ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம் தேதிக்குள்ளாக எல்ஐசி ஐபிஓ வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது

தாமதம்

ஆனால், ரஷ்யா உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓவை நடத்தினால், மத்திய அரசு எதிர்பார்க்கும் நிதி கிடைக்காது என்பதால் மவுனம்காத்து வருகிறது. எல்ஐசி ஐபிஓ மூலம் மத்திய அரசு ரூ.65 முதல் 75ஆயிரம் கோடிவரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆதலால், பங்கு விற்பனையை காலம் தாழ்த்தி வருகிறது.

3-வது காலாண்டு

இந்தசூழலில் எல்ஐசி நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் எல்ஐசி நிறுவனத்துக்கு 3-வது காலாண்டில் ரூ.234.91 கோடி நிகரலாபமாகக் கிடைத்துள்ளது.நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் லாபம் ரூ.1,642.87கோடியாக அதிகரித்துள்ளது. முதல் 6 மாதங்களில் ரூ.1,437 கோடி லாபம் கிடைத்துள்ளது.

இது கடந்த 2020-21ம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.708 கோடியாகத்தான் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், எல்ஐசி நிறுவனம் முதலீடுகளை விற்பனைசெய்தவகையில், ரூ.29,102 கோடி கிடைத்துள்ளது. 

ப்ரீமியம் வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் ப்ரீமியம் செலுத்தும் வளர்ச்சியும் 554% வளர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 394 சதவீதம் மட்டுமே இருந்தது. 2021 ஏப்ரல் –செப்டம்பரில் ஒட்டுமொத்த பிரிமியம் தொகை ரூ.1.84 லட்சம் கோடியாகஇருந்தது. நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில்இது ரூ1,679 கோடி அதிகரித்து, ரூ.1.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு தூண்டில்

எல்ஐசி ஐபிஓ வெளியிடப்படும் நேரத்தில் 3-ம் காலாண்டுக்கான அறிக்கை வெளியிட்டீல் ரூ.235 கோடி லாபத்தைஈட்டியுள்ளது, முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும். எல்ஐசி ஐபிஓ நடக்கும்போது, பங்குகளை வாங்குவதற்காக இன்னும் கூடுதலாக ஆர்வத்தைத் தூண்டுவதற்கு இந்த காலாண்டு முடிவுகள் ஊக்கமாக இருக்கும்.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!