share market today: பங்குச்சந்தையில் கரடிஆதிக்கம்: சென்செக்ஸ் வீழ்ச்சி தொடர்கிறது: ஐடி பங்குகளுக்கு அடி

Published : Apr 19, 2022, 03:56 PM IST
share market today: பங்குச்சந்தையில் கரடிஆதிக்கம்: சென்செக்ஸ் வீழ்ச்சி தொடர்கிறது: ஐடி பங்குகளுக்கு அடி

சுருக்கம்

share market today  : மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையும் காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், பிற்பகலுக்குப்பின் மளமளவெனச் சரிந்து படுவீழ்ச்சியைச் சந்தித்தது. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையும் காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், பிற்பகலுக்குப்பின் மளமளவெனச் சரிந்து படுவீழ்ச்சியைச் சந்தித்தது. தொடர்ந்து 5-வது நாளாக பங்குச்சந்தையில் சரிவு தொடர்கிறது

சர்வதேச காரணிகள்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரி்த்துவருவதால் அந்நாட்டின் பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி மார்ச் மாதம் முடிந்த முதல் காலாண்டில் எதிர்பார்த்த அளவைவிட குறைந்து 4.8 ஆகச் சரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை, பல்வேறு நகரங்கள் லாக்டவுனில் சிக்கியுள்ளன.  ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து விரைவில் திறக்கப்பட இருப்பதால், பொருட்களின் சப்ளை பாதிப்பு குறையும் என்று முதலீட்டாளர்கள் நம்பினர். 

தட்டுப்பாடு

கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்ட வந்த லிபியா நாடு திடீரென ஏற்றுமதியைக் குறைத்துள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாலர்களைச் சூழ்ந்தது. ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சாதகமான போக்கால் இன்று காலை இந்திய பங்குச்சந்தையிலும் ஏற்றமான போக்கு காணப்பட்டது. ஆசியச் சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் முடிந்தன, டோக்கியோ, சிட்னி பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் முடிந்தன. ஆனால், ஐரோப்பியச் சந்தைகள் சரிவில் முடிந்தன

ஹெச்டிஎப்சிக்கு பலத்த அடி

ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவற்றை இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பங்குகள் கடுமையாக அடிவாங்கி வருகிறது. கடந்த 9 நாட்களில் ரூ.2.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரூ.1.67 லட்சம் கோடிசரிந்தது. ஹெச்டிஎப்சி சந்தைமதிப்பு ரூ.9.18 லட்சம் கோடியிலிருந்து, ரூ.7.51 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது.  இன்று பிற்பகலுக்குப்பின் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்கத் தொடங்கியதால் பங்குகள் சந்தையில் சரிவு கடுமையாக இருந்தது.

சரிவுக்கு மேல் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 703 புள்ளிகள் சரிந்து 56,463 புள்ளிகளில் சரிந்து முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையி்ல் நிப்டி 215 புள்ளிகள் குறைந்து, 17,00 புள்ளிகளில் நிலைபெற்றது.

 22 16 பங்குகள் சரிந்தன, 1111 பங்குகள் முன்னோக்கி நகர்ந்தன, 118 பங்குகள் மதிப்பு எந்தவிதமான மாற்றமும் இல்லாமலும் உள்ளன.
30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 2 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. மற்ற 28நிறுவனப் பங்குகளும் சரிவடைந்தன

ரிலையன்ஸ் லாபம்

குறிப்பாக பார்திஏர்டெல், டெக்மகிந்திரா, ஹெச்சிஎல்டெக், டாக்டர்ரெட்டீஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் டாடா ஸ்டீல், பஜாஜ்பின்சர்வ்,என்டிபிசி, பவர்கிரிட், மகிந்திரா அன்ட் மகிந்திரா,  நெஸ்ட்லே இந்தியா, கோடக்வங்கி, டிசிஎஸ், ஐடிசி, விப்ரோ, ஆக்சிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தன.

ஐடி பங்குகள் சோகம்

நிப்டியில் அப்பல்லோ மருத்துவமனை, கோல் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, பிபிசிஎல் ஆகிய பங்குகள் லாபமடைந்தன
நிப்டியில் அனைத்து துறை  பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதிகபட்ச தகவல் தொழில்நுட்பம் மைனஸ் 2.98, எப்எம்சிஜி -2.82, ரியல்எஸ்டேட் -2.47, ஊடகத்துறை -1.92, நிதிச்சேவை -1.91 சதவீதம் சரிந்து முடிந்தன. மருந்துத்துறை, ஆட்டமொபைல், பொதுத்துறை  வங்கி, தனியார் வங்கி என அனைத்து துறைகளும் பிற்பகலுக்குப்பின் சரிந்தன.  


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்