
வங்கி வேலை நேரம், பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி சந்தை வர்தத்க நேரம் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வேலை நேரம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா பரவல்
நாட்டில் கொரோனோ வைரஸ் பரவல் இருந்த நேரத்தில் வங்கிகளின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல பங்குச்சந்தை, கமாடிட்டி மார்க்கெட், அந்நியச் செலாவணி சந்தை அனைத்திலும் நேர மாற்றம் கொண்டு வரப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டதையடுத்து, வங்கிகள், பங்கு்சசந்தை வேலை நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.
காலை 9மணி
இதன்படி வங்கிகள் அனைத்தும் இனிமேல் காலை 9 மணிக்கே செயல்படத்தொடங்கும், 3.30 மணிவரை வேலைநேரமாகும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் 10 மணிக்குத்தான் வங்கி வேலைநேரம் என்று நினைத்திருக்க வேண்டாம். காலை 9 மணிக்கே வங்கிக்குச் சென்று வரவு செலவு, டெபாசிட், காசோலை மாற்றுதல், கடன் பெறுதல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கலாம்.
வங்கிகளின்வேலை தொடங்கும் நேரம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, ஆனால், முடியும் நேரத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்த புதிய அறிவிப்பு நேற்று முதல் நாடுமுழுவதும் அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.
பங்குச்சந்தை வேலை நேரம்
ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளின் வேலை நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்நியச் செலாவணி ரூபாய் வர்த்தகம் காலை 9 மணி முதல் மாலை 3.30 வரையிலும், அரசு கடன்பத்திரங்களுக்கான சந்தை காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலும் செயல்படும்.
3-வது நபருக்கான அரசு பத்திரங்களுக்கான ரெப்போ சந்தை காலை 9மணி முதல் மாலை 3 மணிவரையிலும், கமர்ஷியல் பேப்பர் மற்றும் டெபாசிட் சான்று காலை 9மணி முதல் மாலை 3.30 வரையிலும் செயல்படும். கார்ப்பரேட் கடன் பத்திரங்களுக்கான சந்தை காலை 9மணி முதல் மாலை 3.30 வரையிலும் செயல்படும்.
ஃபாரெக்ஸ் டிரைவேட்டிவ்ஸ் காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30வரையிலும் செயல்படும். ரூபாய்க்கான வட்டிவீத சந்தை காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 வரையிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.