narendra modi: மோடி அரசு 8 ஆண்டுகள் நிறைவு: 120% உயர்ந்த பங்குச்சந்தை: இனிதான் உண்மையான சோதனை

By Pothy RajFirst Published May 30, 2022, 10:58 AM IST
Highlights

share market today: narendra modi:  பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்குவந்து கடந்த வியாழக்கிழமையுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த 8ஆண்டுகாலமும் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன், கர்ஜித்தது ஆனால், இனிவரும் காலங்கள் நிச்சயம் சோதனைக்காலமாகவே இருக்கும்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்குவந்து கடந்த வியாழக்கிழமையுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த 8ஆண்டுகாலமும் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன், கர்ஜித்தது ஆனால், இனிவரும் காலங்கள் நிச்சயம் சோதனைக்காலமாகவே இருக்கும்

120% உயர்வு

2014ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றபின், பங்குச்சந்தை 120 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி இந்தியப் பங்குச்சந்தை சென்செக்ஸ் 24,716 புள்ளிகள் இருந்தது. ஆனால், 8 ஆண்டுகள் நிறைவில் 2022, மே 26ம் தேதி, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 54,232.53 புள்ளிகள் ஏறக்குறைய 120 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

இதில் உச்சகட்டமாக 2021ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி 62,245.43 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. 2014ம் ஆண்டு மே 26ம் தேதியிலிருந்து இதுவரை 491 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு மும்பைப்  பங்குச்சந்தையில் 500 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மதிப்பு உயர்வு

இதில் குறிப்பாக 2014ம் ஆண்டு மே 26ம் தேதி மோடி பிரதமராக ஆட்சிக்கு வரும்போது, சாதானா நைட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெறும் 0.40 பைசாவாக இருந்தது. ஆனால், தற்போது சாதனா கெமிக்ஸ் நிறுவனப் பங்கு மதிப்பு ரூ.131.10 ஆக அதிகரித்துள்ளது. 2022, மே 26ம் தேதி சாதனா நிறுவனப்பங்கு ரூ.111.95க்கு விற்பனையானது.

இந்த 8 ஆண்டுகளில் எஸ்இஎல் மேனுபேக்சரிங் நிறுவனம், டன்லா பிளாட்ஃபார்ம்ஸ், எக்குயிப் சோசியல் இன்பாக்ட் டெக், அப்பல்லோ பின்வெஸ்ட், டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அன்ட் சொலூசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உச்சபட்ச லாபமடைந்தன.

துறைகள் ஏற்றம்

மும்பைப்பங்குச்சந்தையில், தகவல்தொழில்நுட்பம், ஹெல்த்கேர், வங்கித்துறை, எப்எம்சிஜி, மின்துறை, ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்கு, உலோகம், தொலைத்தொடர்பு பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.

உண்மையான சவால்கள்

இந்த 8ஆண்டுகளில் பங்குச்சந்தையில் வளர்ச்சி அதிகமாக இருந்துள்ளது. ஆனால், கொரோனாவிலிருந்து பொருளாதாரம் தற்போதுதான் மீண்டு வருகிறது. அதற்கு பணவீக்கம், ரஷ்யா உக்ரைன் போர், புவிஅரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுதல், ரிசர்வ் வங்கியின் வட்டிவீத உயர்வு போன்றவை பங்குச்சந்தையில் கடந்த சில மாதங்களாகவே நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளன. 

அந்நிய முதலீடு  வெளிேயற்றம்

அதிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 7 ஆண்டுகளில் அரசு சேர்த்த ரூ.2.50 லட்சம் கோடி முதலீட்டை கடந்த 8 மாதங்களில் வெளியே எடுத்துள்ளனர். இதனால் பங்குச்சந்தை ஆட்டம் கண்டிருக்கிறது. அமெரிக்க பெடரரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்த, உயர்த்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுப்பது மேலும் அதிகரிக்கும். அவ்வாரு டாலர் முதலீடு வெளியேறும்போது, ரூபாயின் மதிப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு சரியத் தொடங்கும். 

இதுபோன்ற சிக்கல்களை இனிவரும் காலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சந்திக்க இருக்கிறது. இந்த பிரச்சினைகளைச் சமாளிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது, அந்நிய முதலீடு வெளியேற்றத்தைஎவ்வாறு தடுக்கப்போகிறது, ரூபாய் மதிப்பு சரிவை எவ்வாறு குறைக்கப்போகிறது என்பது போன்ற பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
 

click me!