VAT வரியை குறைங்க! பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாநிலங்களுக்கு ரூ.49,000 கோடி லாபம்: எஸ்பிஐ வங்கி ஆய்வு

By Pothy RajFirst Published May 30, 2022, 10:15 AM IST
Highlights

petrol diesel price: VAT: கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதனால் பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக உயர்ந்ததால், மாநிலங்களுக்கு வாட் வரி மூலம் ரூ.49ஆயிரத்து229 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆதால், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாட் வரியை மாநிலங்கள் குறைக்க பரிசீலிக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆய்வு தெரிவித்துள்ளது.

petrol diesel price: VAT: கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதனால் பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக உயர்ந்ததால், மாநிலங்களுக்கு வாட் வரி மூலம் ரூ.49ஆயிரத்து229 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆதால், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாட் வரியை மாநிலங்கள் குறைக்க பரிசீலிக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆய்வு தெரிவித்துள்ளது.

விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால், அதற்கு ஏற்றார்போல் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையில் உற்பத்திச் செலவைவிட, மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி,கூடுதல், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி ஆகியவற்றின் சதவீதம்தான் இருக்கிறது. பெட்ரோல், டீசலின் உண்மையான விலையைவிட ஒரு மடங்கு வரி விதிக்கப்படுகிறது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 8ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்தது. ஆனால், பாஜக ஆளும் மாநில அரசுகள் மட்டும்தான் வரியைக் குறைத்துள்ளன. பாஜக ஆளாத பிறமாநிலங்கள் வரியைக் குறைக்கவில்லை. 

பிரதமர் மோடிகோரிக்கை

இது தொடர்பாக பிரதமர் மோடியும் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது வரியைக் குறைத்துவிட்டது, மாநில அரசுகளும்அதுபோல் வாட் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு நடத்திய ஆய்வில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாநிலங்களுக்கு வாட் வரி ரூ.49ஆயிரத்து 229 கோடி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பலன் அடைந்தது மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்கள்தான்

அதிகமான வாட் வரி

ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் கூறுகையில் “ பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாநில அரசுகளுக்கு வாட் வரி ரூ.34 ஆயிரம் கோடியைக் கடந்து ரூ.49ஆயிரம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஆதலால், வாட் வரியை சிறிது குறைப்பது குறித்து பரிசலீக்கலாம். இதில் அதிகமாக மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா மாநிலங்கள் பலன் அடைந்துள்னன

கொரோனா காலத்திலிருந்து மாநிலங்களின் நிதி நிலைமை ஓரளவுக்கு உயர்ந்து வருகிறது. ஆதலால், தேவைப்பட்டால் வாட் வரியில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் எதிரொலி, மாநிலங்கள் கடன் பெறுவதிலும் எதிரொலிக்கும். குறைந்தபட்ச டீசல் மீது லிட்டருக்கு ரூ.2, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கலாம் . இந்த குறைப்பால் மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்படாது. மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிராவுக்கு ஜிடிபில் கடன் அளவு குறைவாக இருக்கிறது, நிதிச்சூழலில் நல்ல முன்னேற்றமும் இருப்பதால் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.5 வரை வாட்வரியைக் குறைகக்லாம். 

குறைக்கலாம்

ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் வரிவிகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. ஆதலால், இந்த மாநிலங்கள் வாட் வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கலாம். 
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் கடும் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றைக் குறைக்கவும், குழப்பமான வரிவிகித்திலிருந்து தப்பிக்கவும் ஜிஎஸ்டி வரும்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால், மத்திய அரசுக்கு இன்புட் டேக்ஸ் ரூ.20ஆயிரம் கோடி கிடைக்கும்.

இவ்வாறு  கோஷ் தெரிவித்தார்.
 

click me!