
elon musk:2021ம் ஆண்டில் அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார் என்று ஃபார்ச்சூன்500 இதழ் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டில் அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் சிஇஓக்கள் பட்டியலை ஃபார்ச்சூன்500 வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். 2021ம் ஆண்டில் எலான் மஸ் 2350 கோடி டாலர்(ரூ.1.82 லட்சம் கோடி)ஊதியம் பெற்றுள்ளார். எந்த நிறுவனத்தின் சிஇஓவும் இதுபோன்று அதிகமாக ஊதியம பெற்றதில்லை.
2-வது இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், 3-வது இடத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, நெட்பிளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்ஸ் உள்ளனர்.
2021ம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் 77 கோடி டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார். டிம் குக் பதவிக்காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.20 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. அடுத்ததாக நிவிடியா நிறுவனத்தின் தலைவர் ஜென் ஹாங் கடந்த ஆண்டு 56.10 கோடி டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
4-வது இடத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்க் இடம் பெற்றுள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்துவதற்காக மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஹாஸ்டிங்ஸ் கடந்த ஆண்டு 45.30 கோடி டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார். இதில் 4.80 கோடிக்கு ஊதியமாகவும் மற்றவை பங்குகளாகவும் ஹாஸ்டிங்கிற்கு தரப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா 7-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு சத்யா 30.94 கோடி டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார். சிஇஓக்களில் குறைத்து மதிப்பிடப்படும் நாதெள்ளா இருந்தாலும், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா இருந்து வருகிறார்.
எக்னாமிக் பாலிசி இன்ஸ்ட்டியூட் வெளியிட்ட அறிக்கையில் சராசரியான பெரிய நிறுவனத்தின் சிஇஓ வாங்கும் ஊதியம் என்பது சராசரி ஊழியரின் ஊதியத்தைவிட 351 மடங்கு உயர்ந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.