
அம்பேத்கர் ஜெயந்தி, புனித வெள்ளி காரணமாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச்சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது
மொத்த விற்பனை கமாடிட்டி மார்க்கெட், செலாவணி பரிமாற்றச்சந்தையும் அடுத்த 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பாரெக்ஸ் மற்றும் காமாடிட்டி மார்க்கெட் அடுத்த 4 நாட்களுக்கு இல்லை.
4 நாட்கள் விடுமுறைக்குப்பின் வரும் திங்கள்கிழமை(18ம்தேதி) பங்குச்சந்தை மீண்டும் வழக்கம்போல் செயல்படும்.
மும்பைப் பங்குச்சந்தை நேற்று மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் சரிந்து, 58,338 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 54 புள்ளிகள் குறைந்து, 17,475 புள்ளிகளில் நிலைபெற்றது.
நிப்டியில் மாருதி சுஸூகி, ஹெச்டிஎப்சி, ஹெட்சிஎப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய பங்குகள் இழப்பைச் சந்தித்தன. ஓஎன்ஜிசி, அப்பல்லோ மருத்துவமனை, ஐடிசி, சன் ஃபார்மா, யுபிஎல் ஆகிய பங்குகள் லாபமடைந்தன. நிப்டியில் ஆட்டோமொபைல், வங்கித்துறை பங்குகள் நேற்று சரிவைச் சந்தித்தன. ஆனால், எப்எம்சிஜி, உலோகம், எரிசக்தி, மருந்துத்துறை பங்குகள் லாபமடைந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தகம் முடிவில், ரூ.76.18ஆக இருந்தது, நேற்றுமுன்தினம் ரூ.76.13 பைசாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது
கோடக் செக்யூரி்ட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனிந்தியா பானர்ஜி கூறுகையில் “ வர்தத்கத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 பைசா உயர்ந்தது. நீண்ட விடுப்பு வர இருப்பதால், வர்த்கர்கள் எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இன்னும் தொடர்ந்து டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு ரூ.75.80 முதல் ரூ.76.40 இடையேதான் சென்று வருகிறது” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.