
மும்பை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கி பிற்பகலுக்குப்பின் சரிவுடன் முடிந்துள்ளது.
பணவீக்கம்
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் அளவு கட்டுப்பாட்டு அளவைவிட மீறிவிட்டது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியாகின. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனிலும் ஆண்டு பணவீக்கம் 7 சதவீதமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துவிட்டது. இதனால் பிரிட்டனிலும்கடனுக்கான வட்டி வீதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டிவீதம் உயரும்
இந்தியாவில் மார்ச் மாதத்தில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் இருப்பதைவிட அதிகரித்து 17 மாதங்களில் இல்லாத அளவாக 6.95% உயர்ந்தது. இதனால், ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதத்தை 25 புள்ளிகள்வரை உயர்த்தலாம் என ஆய்வுகள் தெரிவித்தன.
இது தவிர உக்ரைனுடன் அமைதிப்பேச்சு என்பது முடிந்துவிட்டது என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது போர் இன்னும் தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற உலகக் காரணிகள் கவலைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய முதலீட்டாளர்கள் இன்று காலை வர்த்தகத்தை லாபமீட்டும் நோக்கில் பங்குகளை விற்பனை செய்தும், கைமாற்றியதால் ஏற்றத்துடன் தொடங்கியது.
முதலீட்டாளர்கள் எச்சரிக்கை
ஆனால், பிற்பகலுக்குப்பின் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்ததால், பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் காலையில் ஏற்றம் கண்டனிலையில் மாலையில் சந்தை சரியத் தொடங்கியது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் சரிந்து, 58,338 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 64 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,465 புள்ளிகளில் முடிந்தது.
லாபம்
30 முக்கிய பங்குகள் உள்ள மும்பைப் பங்குச்சந்தையில் 10 பங்குகள் சரிவில் முடிந்தன, மற்ற 20 பங்குகளும் லாபத்தில் முடிந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர்கிரிட் கார்ப்பரேஷன், மாருதி, டாக்டர் ரெட்டீஸ், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. மாறாக சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஐடிசி ஆகிய பங்குகள் லாபமடைந்தன. ஐடிசி பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன
நிப்டி
நிப்டியில் மாருதி சுஸூகி, ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன. மாறாக ஓன்ஜிசி, அப்பல்லோ மருத்துவமனை, ஐடிசி, சன் ஃபார்மா, யுபிஎல் ஆகியவை அதிக லாபமடைந்தன
நிப்டியில் ரியல்எஸ்டே்ட, ஆட்டோமொபைல், வங்கித்துறை தவிர அனைத்து துறைகளும் ஏற்ரத்தில் முடிந்தன. எப்எம்சிஜி, முதலீட்டுப் பொருட்கள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, 0.5% உயர்ந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.