spice jet : ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 பைலட்களுக்கு தடை: டிஜிசிஏ அதிரடி

By Pothy RajFirst Published Apr 13, 2022, 12:14 PM IST
Highlights

spice jet : ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனத்தின் 90 பைலட்களுக்கு போயிங் 737 ரக விமானங்களை இயக்க முறையாக பயிற்சி இல்லை என்பதால், அவர்களுக்கு தடை விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) தடை விதித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனத்தின் 90 பைலட்களுக்கு போயிங் 737 ரக விமானங்களை இயக்க முறையாக பயிற்சி இல்லை என்பதால், அவர்களுக்கு தடை விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) தடை விதித்துள்ளது.

போயின் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கி பரிசோதிக்கப்பட்டபோது இந்த 90 விமானிகளுக்கும் முறையான பயிற்சி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போயிங் மேக்ஸ் விமானவிபத்து 

அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த 3 நாட்களில் எத்தியோப்பிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் அடிடாஸ் அபா அருகே விழுந்து விபத்துக்குள்ளானது இதில் 4 இந்தியர்கள் உள்பட 157 பேர் கொல்லப்பட்டனர் 

இதையடுத்து போயிங் விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களுக்கானத் தடையை டிஜிசிஏ நீக்கியது. இந்த விமானங்களில் இருக்கும் மென்பொருள் குறைபாட்டை போக்கியதாக போயிங் நிறுவனம் தெரிவித்ததையடுத்து, தடை நீக்கப்பட்டது. 

90 விமானிகள் 

இந்நிலையில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குவதற்கு முறையான பயிற்சியின்றி 90 விமானிகள் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு தடைவிதி்த்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ தலைவர் அருண் குமார் விடுத்த அறிக்கையில் “ தற்போதுள்ள நிலையில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 90 விமானங்களுக்கு போதுமான பயிற்சிஇல்லை. ஆதலால் அவர்கள் விமானங்களை இயக்க தடைவிதிக்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் பயிற்சி எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயிற்சி

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 90 விமானிகள் போயிங் மேக்ஸ் விமானங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 650 பைலட்களுக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க பயிற்சி எடுத்துள்ளனர். ஆனால், விமானிகளின் திறனை ஆய்வு செய்ததில் 90 விமானிகளுக்கு முறையான பயிற்சி இல்லை என்பதால், அவர்களை மீண்டும் பயிற்சிக்கு அனுப்ப டிஜிசிஐ உத்தரிவிட்டுள்ளது. இதனால் இந்த 90 விமானிகளும் மீண்டும் பயிற்சிக்குச் செல்ல உள்ளனர். இந்த தடையால் விமானப் போக்குவரத்து பாதிக்காது. நாங்கள் தற்போது 11 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருகிறோம். இதற்கு 144 பைலட்கள்தேவை. போதுமான பைலட்கள் உள்ளனர்”  எனத் தெரிவித்தார்

click me!