cpi inflation: மார்ச் சில்லரை பணவீக்கம் 6.95% அதிகரிப்பு: ஓர் ஆண்டுக்குள் இரு மடங்கு: வட்டி வீதம் உயருமா?

By Pothy RajFirst Published Apr 13, 2022, 10:22 AM IST
Highlights

cpi inflation india: மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.95சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த நிலையில் அதைவிட அதிகரித்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியுள்ளது.

மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.95சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த நிலையில் அதைவிட அதிகரித்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியுள்ளது.

கட்டுப்பாட்டு இலக்கு

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் பணவீக்கம் 6.95% அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சில்லரைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து 3-வது மாதமாக உயர்ந்து வருகிறது. இதில் கடந்த 2021 மார்ச் மாதம் இருந்த பணவீக்க அளவைவிட, 2022 மார்ச் மாதத்தில் பணவீக்கம் இருமடங்காக அதிகரி்த்துள்ளது.

உணவுப் பணவீக்கம்

கிராமப்புறங்களில் உணவுப் பணவீக்கம் கடந்த 2021 மார்ச் மாதத்தில்  3.94% ஆக இருந்தது, ஆனால், 2022, மார்ச் மாதத்தில் 8.04% சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 5.81% இருந்தது. மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கத்தில் இருக்கும் 6.95% உயர்வு என்பது, கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவு உயர்வாகும். 

2021-22 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட சராசரி பணவீக்கம் என்பது 5.51% மட்டும்தான். ஆனால், அதன் அளவைவிட சராசரி அளவு 5.30 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

விலைவாசி உயர்வு
சமையல் எண்ணெய் விலை 18.79 சதவீதமும், காய்கறிகள் விலை 11.64 சதவீதமும் உயர்ந்துள்ளது. இறைச்சி மற்றும் மீன்விலை 9.63 சதவீதமும், காலணி மற்றும் துணிவகைகள் 9.4சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரம்7.52 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட நிதிக்கொள்கை அறிவிப்பில், பணவீக்கம் 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது, இனிமேல் 5.70 சதவீதமாக அதிகரி்க்கும் என்று தெரிவித்தது. அதாவது வரும் காலங்களில் விலைவாசி இன்னும் அதிகரிக்கும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியது. 

வட்டிவீதம் உயருமா

ராய்டர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டகணிப்பில்கூட பணவீக்கம் 6.35 சதவீதம் என்றுதான் மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதைவிட உயர்ந்து 6.95% அதிகரித்துள்ளது. இது நிச்சயம் ரிசர்வ் வங்கிக்கு அடு்த்தடுத்து நெருக்கடியை ஏற்படுத்தும். ஏப்ரல் மாதத்திலும் பெரும்பாலும் பணவீக்கம், 6சதவீதத்துக்கு மேல் வருவதற்கே வாய்ப்புள்ளது. ஆதலால், வரும் ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கை அறிவிப்பில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் எனத் தெரிகிறது
 

click me!