
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக(bjp) முன்னிலை பெற்றுவரும் செய்தி பங்குச்சந்தையில் எதிரொலித்து வருகிறது. இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.
ரூ.29லட்சம் கோடி இழப்பு
உக்ரைன் ரஷ்யா(ukraine russia) இடையிலான போரால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பங்குச்சந்தையில்(Sharemarket) பெரும் ஊசலாட்டம் நிலவியது. இதில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்து முதலீட்டாளர்களுக்கு கடந்த மாதத்தில் ரூ.29 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது.
உயர்வு
ஆனால், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் தென்படுவது, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஆகியவை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதும் கூடுதல் நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு(investors) அளித்தது. இதனால் நேற்று பங்குச்சந்தை 1223 புள்ளிகள் உயர்ந்து, ஏற்றத்துடன் முடிந்தது.
பங்குச்சந்தையில் ஏற்றம்
இந்த உயர்வை இன்று காலையும் பங்குச்சந்தை(Stock market) தக்கவைத்துக் கொண்டது. 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்(Election results) முடிவுகளில் உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூரில் பாஜக முன்னிலை பெற்றுவருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் (Sensex)1200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி 55,815 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி(Nifty) 320 புள்ளிகள் 16,638 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
உலோகம் சரிவு
மும்பைப் பங்குசந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 29 பங்குகள் காலையிலிருந்தே ஏற்றத்துடன் காணப்படுகின்றன, முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வாங்கி வருகிறார்கள். டாடா ஸ்டீல் பங்குகள் மட்டும் சரிவில் உள்ளது.
உற்சாகம்
ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகியவை 5 சதவீதம் உயர்வுடன் உள்ளன. வங்கித்துறைப் பங்குகளும் 3 சதவீதம் ஏற்றத்துடன் வர்த்தகத்தில் உள்ளதால் முதலீட்டாளர்கள் உற்காசமடைந்துள்ளனர்.ஆக்சிஸ்வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன.
நிப்டியில் (NIFTY)முன்னேற்றம்
தேசியப்பங்கு்சசந்தையான நிப்டியில், வங்கித்துறை, ஆட்டோமொபைல், நிதிச்சேவை, எப்எம்சிஜி, ஐடி, ஊடகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல்எஸ்டேட் ஆகிய துறைகளின் ப ங்குகள் காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இதில் உலோகத்துறை பங்குகள் மட்டும்சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.