வாரத்தின் கடைசி வர்த்தகதினமான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியில் முடிந்தது. நிப்டி மீண்டும் 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
அமெரிக்காவின் பணவீக்கம் குறையும் வரை வட்டிவீதம் உயர்த்த பெடரல் ரிசர்வ் திட்டமிட்டிருப்பதாக எழுந்த செய்தியால் அமெரிக்கச் சந்தை சரிந்தது. இது உலகளவில் எதிரொலித்தது. ஆசியச் சந்தையிலும் மந்தமான நிலைஇருந்ததால், இந்தியாவிலும் காலை முதலே சரிவுடன் வர்த்தகம் காணப்பட்டது.
பங்குச்சந்தையில் ஊசலாட்டம்| சென்செக்ஸ், நிப்டி உயர்வு:ஐடி, உலோகம் பங்குகள் ஜொலிப்பு
காலை சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடனே நகர்ந்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 316 புள்ளிகள் குறைந்து, 61ஆயிரத்தில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 92 புள்ளிகள் சரிந்து, 17,944 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ளமுக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 7 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்ற 22 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன.
பங்குச்சந்தை| சென்செக்ஸ் 350புள்ளிகள் உயர்வு! நிப்டி 18,000-க்கு மேல் ஏற்றம்
லார்சன்அன்ட் டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியென்ட் பெயின்ட்ஸ்,ரிலையன்ஸ், ஐடிசி, மாருதி, என்டிசிபி ஆகியபங்குகள் விலை உயர்ந்தன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
லார்சன் அன்ட்டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், பிபிசிஎல், ஏசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா பங்குகள் விலை உயர்ந்தன. நிப்டியில் முதலீட்டு பொருட்களைத் தவிர அனைத்துத் துறைப் பங்குகளும் சரிவில் முடிந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.