மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் பெறுவதற்கு, மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 31ம் தேதி கடைசியாகும்.
மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் பெறுவதற்கு, மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 31ம் தேதி கடைசியாகும்.
இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் கணவர், மனைவி இருவரும் முதலீடு செய்தால் மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் பெறமுடியும். ஓய்வூதிய வயது, நிதிச்சூழல், உள்ளிட்டவற்றைப் பொறுத்து பென்ஷன் தொகை மாறும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன அம்சங்கள் விவாதிக்கப்படும்?
வேலையிலிருந்து ஓய்வுபெற்றவின், வருமானத்துக்கான வழி நின்றுவிடும், ஆனால், செலவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், அல்லது அதிகரிக்கவும் செய்யலாம். இந்த நேரத்தில் நிரந்தரமான ஓய்வூதியம் என்பது அவசியமாகும். இதைக் கருத்தில்கொண்டுதான் மூத்த குடிமக்களின் நலனுக்காக எல்ஐசியுடன் இணைந்து, பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா எனும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும். எல்ஐசி நிறுவனம் இந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2017, மே 4ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் முதியோருக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் பெறும் திட்டம் 2023-24ம் ஆண்டுடன் முடிகிறது. இந்தத் திட்டத்தில் முதியோர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் பெறலாம்.
வரியே இல்லாமல் பொருளாதாரத்தை ஒர் அரசால் இயக்க முடியுமா? ஏதாவது நாடுகள் இருக்கிறதா?
முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக இருக்கும், முதிர்வுகாலம் முடிந்தபின் எல்ஐசி பணத்தை முதியோரிடம் திரும்ப வழங்கும். இந்ததிட்டத்தில் சேரும் முதியோர், தங்களின் அவசரத் தேவைக்காக முன்கூட்டியே திட்டத்தை முடித்து பணத்தையும் எடுக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியத்தை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒருமுறை என முதியோர் விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் முதியோர் இலவசமாக உடல்நலப் பரிசோதனையும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் செய்து கொள்ள முடியும்.
முதலீடு செய்யும் முதியோர் தீவிர உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகினால், முதிர்வுக் காலத்துக்கு முன்பே பணத்தை எடுக்கலாம். திட்டத்தில் முதலீடு செய்த 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் மனைவிக்காக பணத்தை எடுக்கலாம் அல்லது திட்டத்தில் இருந்து கடனுதவியும் பெறலாம். முதிர்வுத் தொகை வருவதற்கு முன்பாகவே முலீட்டாளர்கள் இறந்துவிட்டால், வாரிசுதாரருக்கு பணம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சிறப்பு அம்சம் என்னவெனில், கணவன், மனைவி இருவருமே சேர்ந்து முதலீடு செய்யலாம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம்வரை முதலீடு செய்யலாம். ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9,500 ஓய்வூதியமும், ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.18,500 ஓய்வூதியமாகப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் முதியோர் எல்ஐசி இணையதளம் அல்லது அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தை அல்லது எல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் உதவியுடன் முதலீடு செய்யலாம்.