Gold Rate Today: தங்கம் விலை கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.720 குறைந்து நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.720 குறைந்து நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,280ஆகவும், சவரன், ரூ.42,240ஆகவும் இருந்தது.
மளமளவெனச் சரிவும் தங்கம் விலை ! நகைப் பிரியர்கள் குஷி: இன்றைய(16-2-2023) நிலவரம்?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூ.5,250ஆகவும், சவரனுக்கு 240 ரூபாய் வீழ்ச்சி அடைந்து ரூ.42 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,250க்கு விற்கப்படுகிறது
தொடர்ந்து 5வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துவருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக வந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 42 ஆயிரமாகக் குறைந்துவிட்டது.
அமெரிக்கப் பொருளாதாரம், சர்வதேச சூழல்களைப் பொறுத்து தங்கம் விலை மாறி வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை அதிகப்படுத்தியிருப்பதாலும் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. இது தவிர, பண்டிகை, விஷேச காலம் முடிந்ததும் தங்கத்தின் தேவை குறைய காரணமாகும்.
தங்கம் விலை தொடர் சரிவு! மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன
வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.80 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.71.20 ஆகவும், கிலோ ரூ.71,800 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.600 சரிந்து, ரூ.71,200 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.