
Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடன் பயணித்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்துள்ளன.
நீண்டநாட்களுக்குப்பின் நிப்டி 18ஆயிரத்துக்கு மேல் உயர்ந்திருந்தநிலையில், இன்று காலை முதல் 18ஆயிரத்துக்கு கீழ் பயணிக்கிறது.
உலகச் சந்தையின் தாய் எனப்படும்அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றம், ஏற்றத் தாழ்வுகள் உலகளில்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து, பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவதை நிறுத்தும் என்றால் அது உலகளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பங்குச்சந்தை| சென்செக்ஸ் 350புள்ளிகள் உயர்வு! நிப்டி 18,000-க்கு மேல் ஏற்றம்
அதேசமயம், பணவீக்கம் குறையவில்லை , பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது என்ற செய்தி வந்தால், பங்குகள் விலை குறைகின்றன, சந்தையில் இருள்சூழ்ந்த போக்கு காணப்படுகிறது.
இந்த ஏற்றத்தாழ்வு நிலையால், சந்தையில் இன்னும் தெளிவான நிலைக்கு வரமுடியாமல் முதலீட்டாளர்கள் திணறுகிறார்கள். நிப்டியைப் பொறுத்தவரை 18ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து இன்று காலை முதல் சரிந்துள்ளது. அந்நிய முதலீ்ட்டாளர்கள் கடந்த சில நாட்களாக முதலீட்டை அதிகப்படுத்தியநிலையில் நேற்று மீண்டும் முதலீட்டை எடுத்துள்ளனர்.
ஆசியச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக தொடங்கியுள்ளது. இதன் எதிரொலி இன்று காலைமுதல் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 194 புள்ளிகள் சரிந்து, 61,124 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 49 புள்ளிகள் குறைந்து, 17,987 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மீண்டது பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு:ஐடி, ஆட்டோ பங்குகள் ஜோர்
மும்பை பங்குச்சந்தையில் உள்ளமுக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 8 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்ற 22 நிறுவனப் பங்குகள் சரிவை நோக்கியும் உள்ளன. டாடா ஸ்டீல், பவர்கிரிட், கோடக்வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எச்யுஎல், என்டிபிசி, பார்திஏர்டெல், டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை ஏறுமுகத்தில் உள்ளன.
நிப்டியில் டாடா ஸ்டீல், பிபிசிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. நெஸ்ட்லே இந்தியா, ஹீரோமோட்டார் கார்ப்பரேஷன், எச்சிஎல் டெக், டெக் மகிந்திரா சிப்லா பங்குகள் விலை குறைந்துள்ளன.
அதானி குழுமத்தில் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன்,அதானி பவர், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜாசிமெண்ட்ஸ், என்டிடிவி பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ், டோட்டல்கேஸ், அதானி ட்ரான்மிஷன் பங்குகள் விலை சரிந்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.