Share Market: இஸ்ரேல் - ஈரான் ஏவுகணை தாக்குதல் : நிலைகுலைந்த Sensex, Nifty

Published : Jun 24, 2025, 04:37 PM IST
Sensex All time high

சுருக்கம்

ஈரான்-இஸ்ரேல் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை இன்று பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரை உயர்ந்தும், பின்னர் சரிந்தும், இறுதியில் சிறிய உயர்வுடன் முடிந்தது. 

உற்சாகமாக களத்தில் குதித்த முதலீட்டாளர்கள்

இல்ரேல் - ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்த கருத்து சர்வதேச சந்தையில் எதிரொலித்தது. ஜூன் 24, செவ்வாய்க்கிழமை காலை இந்திய பங்குச் சந்தைகள் நல்ல நம்பிக்கையுடன் உச்சத்தை நோக்கி சென்றது. காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ், 1,100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 83,018 என்ற உச்சத்தைத் தொட்டது. அதேபோல், நிப்டி 50வும் 25,179.90-ல் ஆரம்பித்து 25,317.70 என்ற புதிய உச்சத்தை எட்டியது. முதலாவது அரை நாள் வர்த்தகம் முழுக்க சந்தை உயரும் நம்பிக்கையில் நகர்ந்தது.

ஈரான்-இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி செய்தி

மாலை நேரத்தில் வந்த ஒரு முக்கிய செய்தி சந்தையின் நடத்தை மாறுவதற்குக் காரணமானது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் சமாதான ஒப்பந்தம் செய்துவிட்டதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்று ஈரான், இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நேரடியாக ஈரானின் தலைநகர் டெஹ்ரானை தாக்க உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியால் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்து பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கினர்.

சந்தை திடீர் வீழ்ச்சி

இந்த திடீர் செய்திகள் வெளியான சில நிமிடங்களில் பங்குச்சந்தை விறைவாக சரிந்தது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் இழந்து 81,900 என்ற அளவிற்கு விழுந்தது. நிப்டி 50, 25,000-க்கும் கீழ் 24,999.70 என்ற குறைந்த புள்ளிக்கு சரிந்தது. முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை வேகமாக விற்பனை செய்து பங்குகளை வெளியே எடுத்தனர். குறிப்பாக, intraday முதலீட்டாளர்கள் அதிக பாதிப்புக்கு ஆளானனர்.

முடிவில் சிறிய ஏற்றம்

இத்தனை அச்சம் மற்றும் வீழ்ச்சிக்கு பின், சந்தை சிறிது நிலைத்தது. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து 82,055.11-ல் முடிந்தது. நிப்டி 50 72 புள்ளிகள் உயர்ந்து 25,044.35-ல் முடிந்தது. இதனால், நாள் முழுவதும் roller coaster போல இருந்தாலும், ஒரு மிதமான ஏற்றத்தில் சந்தை முடிவடைந்தது. BSE Midcap 0.56% மற்றும் Smallcap 0.71% உயர்வை கண்டது.

ஊசலாட்டம் ஏற்படுத்திய காரணங்கள்

இந்த சந்தை ஊசலாட்டத்திற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன. முதலில், ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட சர்வதேச பதற்றம். இரண்டாவதாக, இந்தியா அதிக எண்ணெய் இறக்குமதி செய்கின்ற நாடாக இருப்பதால், அந்த பக்க பிரச்சினைகள் நேரடியாக இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும். மூன்றாவதாக, இன்று பங்கு derivative contracts முடிவடையும் நாளாக இருந்ததால், அதற்கேற்ப volatility அதிகமாக இருந்தது. இந்த மூன்றும் சேர்ந்து, பங்குச் சந்தையில் விசித்திரமான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியது.

முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை

இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் பெரிதாக பதட்டப்பட வேண்டாம். சந்தையின் கீழே இறங்கும் வேளையில், பங்குகளை விற்றுவிடுவது நேர்மறை தீர்வல்ல. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு தற்காலிக அசதி மட்டுமே. ஆனால், intraday மற்றும் short-term முதலீட்டாளர்கள் இந்த மாதிரி நிமிட நிலைமாற்றங்களை கவனிக்க வேண்டும். சந்தை மீண்டும் மேலே வரும் வாய்ப்பு எப்போதும் இருக்கிறது.

பொருளாதார தாக்கம்

ஈரான் பகுதி நாடுகளில் பிரச்சினை என்றால், எண்ணெய் விலை உயரும். இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதால், இது நம் நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணெய் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர் செலவுகள் (consumer inflation) உயரும். மேலும், இதனால் ரூபாய் மதிப்பு சரிவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை நம் நிதி திட்டங்களில் கவனிக்க வேண்டும்.

சந்தையின் உண்மை அடையாளம்

இந்திய பங்குச்சந்தை என்பது சுயமாக இயங்கும் ஒரு பொருளாதார களமே அல்ல. அது உலகத்தின் ஒவ்வொரு மூச்சையும் கவனிக்கும். இன்று இந்தியாவில் எந்த பொருளாதார மாற்றமும் நேரவில்லை என்றாலும், ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்தது மட்டும் சந்தையை புரட்டிப் போட்டது. இதன் மூலம் நாம் உணர வேண்டியது – சர்வதேச செய்திகள், முக்கிய உலகச் சம்பவங்கள் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கின்றன. இன்றைய சந்தை roller coaster போல தொடங்கி முடிந்தது. காலை உற்சாகம், மாலை பதட்டம், இறுதியில் சிறிய மீட்பு – இதுவே சந்தையின் சராசரி தன்மை. முதலீட்டாளர்கள் அமைதியாகவும், திட்டமிட்டு முதலீடு செய்யவும் வேண்டும். பங்குச் சந்தையை ஒரு நியாயமான, நீண்ட பயணமாக கையாள வேண்டும். சர்வதேச நிலவரங்களை தொடர்ந்து கவனித்து, நம் முதலீட்டு முடிவுகளை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனமான செயல்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!