shaktikanta das: RBI: கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து உயரும்; ஆர்பிஐ கவர்னர் வெளிப்படை

By Pothy RajFirst Published May 24, 2022, 5:42 PM IST
Highlights

shaktikanta das : RBI: பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரும்வரை கடனுக்கான வட்டி வீதம் தொடர்ந்து உயரும். எவ்வளவு உயர்த்தப்படும் எனக் கூற முடியாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரும்வரை கடனுக்கான வட்டி வீதம் தொடர்ந்து உயரும். எவ்வளவு உயர்த்தப்படும் எனக் கூற முடியாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்

ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்திருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் பணவீக்கம் 6.95 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.79 சதவீதமாகவும் அதிகரித்தது. 

இதையடுத்து, பணவீக்கத்தைக் ரிசர்வ் வங்கி 40 புள்ளிகளை ரெப்போ ரேட்டில் உயர்த்தியது. மொத்தவிலைப் பணவீக்கமும், சில்லரை விலைப் பணவீக்கமும் தொடர்ந்து உயர்ந்துவருவதால், அடுத்துவரும் ஜூன் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் ரிசர்வ் வங்கி உள்ளது.

இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த படிப்படியாக வட்டிவீதம் உயர்த்தப்படும். ஆனால் வரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எவ்வளவு வட்டி உயர்த்தப்படும் என்பதை இப்போது கூற இயலாது. ஆனால், 5.15சதவீதம் வரை உயரலாம். ஆனால் துல்லியமாக இப்போது கூற முடியாது.

ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்பதை சந்தைநிலவரம் நன்கு அறிந்துவிட்டது, அடுத்த சில நிதிக்கொள்கைக் கூட்டங்களில் வட்டி வீதம் உயர்போகிறது என்பது உணர்ந்துவிட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கியும் செயல்பட்டு பணப்புழக்கத்தைக் குறைக்கும்.

பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கியும் கடந்த சிலமாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய அ ரசும் கோதுமை ஏற்றுமதி தடை, பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரிக்குறைப்பு போன்றவற்றைச் செய்துள்ளது. ஆதலால் இதன் விளைவு வரும் மாதங்களில் தெரியும். 

ரஷ்யா, பிரேசிலைத் தவிர்த்து வட்டிவீதம் பெரும்பாலான நாடுகளில்நெகட்டிவாகத்தான் இருக்கிறது. ஜப்பான் உள்ளி்ட்ட சில நாடுகளைத் தவிர்த்து, வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் இலக்கு 7 சதவீதம் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சாதமானபோக்கை நோக்கி நகர்வோம். ஆனால் சூழல் எவ்வளவு விரைவாக மாறும் எனக் கணிக்க முடியாது. 

இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்

click me!