
இந்தியன் வங்கியில் நாடுமுழுவதும் நியமிக்கப்படஉள்ள 300க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிப் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான இந்தியன் வங்கியில் 312 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் இன்று(24ம்தேதி) அதிகாரபூர்வ இணையதளமான ibps.in தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 2022, ஜூன் 14ம்தேதியாகும்.
இந்த 312 பதவிகளில் மூத்த மேலாளர், மேலாளர், துணை மேலாளர், தலைமை மேலாளர் குருப்-1 முதல் குருப்-7 வரை ஆகியோர் நியமிக்கப்படஉள்ளனர். துணை மேலாளர் பதவிக்கு புதிதாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், ஆனால், சீனியர் மேலாளர், மேலாளர், தலைமை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அனுபவம் இருத்தல் அவசியம்.
கல்வித் தகுதி
பொறியியல் பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 4 ஆண்டுகள் இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அல்லது முதுநிலை எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் , கம்யூட்டர் சயின்ஸ், தகவல்தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
இந்த 312 பதவிகளுக்கு வரும் விண்ணப்பங்களைப் பொறுத்து தேர்வு முறை முடிவு செய்யப்படும். விண்ணப்பங்கள் தகுதிவாரியாக பட்டியலிடப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு அதாவது நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
கட்டணம்
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
எவ்வாறு விண்ணப்பிப்பது
1. Ibps.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. இந்திய வங்கி எஸ்ஓ(SOrecruitment) பதவிக்கான பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
3. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளவிவரங்களை பூர்த்தி செய்து, விருப்பமான பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து, பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை அனுப்பலாம்.
5. விண்ணப்பத்தை அனுப்பியபின் அதை ஒரு நகல் எடுப்பது அவசியம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.