
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் ஆம் தேதி , பிரதமர் மோடி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்திக்கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 3௦ ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தவறுதலாக வீட்டில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாலோ , அல்லது தனி ஒரு நபர், 10-க்கும் மேற்பட்ட நோட்டுகள் வைத்திருந்தாலோ, ஆய்வு மற்றும் நாணயம் சேகரிப்பில் ஈடுபடுவோர் 25நோட்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலோ அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 மடங்கு அபராதம்
பழைய ரூபாய் நோட்டை வைத்திருந்தால், மொத்த தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் சட்டம் 2017’
கடந்த 27-ந் தேதி, இந்த சட்டம் அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த சட்டத்தின் படி, இந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தகுந்த சான்றுகளை காண்பித்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.