வங்கிகளுக்கு மத்திய அரசு கெடு... மார்ச் மாதத்திற்குள் இணைய வங்கி சேவை கட்டாயம்

First Published Mar 2, 2017, 1:00 PM IST
Highlights
Invalid note after the announcement in order to improve digital transaction the federal government has made many attempts


செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் பொருட்டு,மத்திய  அரசு  பல  முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறது.

இதன்  தொடர்ச்சியாக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக , அதிகளவில் ஸ்வைப்பிங் மெஷினை நிறுவ திட்டமிடல்  பணியை  துரிதபடுத்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில்  கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி சேவையை கட்டாயம் வழங்க வேண்டும் என்ற  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இணைய வங்கி சேவை

டிஜிட்டல் பரிவர்த்தனை மேம்படுத்தும் பொருட்டு, இதுவரை இணைய வங்கி சேவையை , 30 முதல் 35 சதவீத மக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் . மேலும்,  மத்திய  அரசால்  அறிமுகம் செய்யப்பட்ட பீம்  செயலி மூலம் ,பரிவர்த்தனை  செய்வதற்கு  அனைத்து  விதமான  முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் .

click me!